வெளிப்புற தோற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் உடல் ஆரோக்கியம் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது.
உடல்நலம்(Health) மற்றும் உடற்தகுதி(Fitness) பற்றிய நமது வரையறையை ஒழுங்குப்படுத்த வேண்டியது அவசியம், என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
முற்றிலும் மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ள ‘உடல்நலம்’ மற்றும் ‘உடற்தகுதி’ என்ற சொற்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் கொண்ட ஒருவருக்கு வெளிப்படையாகத் தெரியாத பல உடல்நலச் சிக்கல்கள் கூட இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் Zerodha நிறுவனத்தின் CEO நிதின் காமத், லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக X தளத்தில் பதிவு செய்திருந்தது பெரும் கவனத்தை ஈர்த்தது.
Fit-ஆக இருக்கும் ஒருவர் ஏன் இதுபோல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
உண்மையில், ஆரோக்கியமாக இருப்பது என்றால் என்ன?
“ஒருவரின் வெளித்தோற்றத்தைப் பார்க்கும் போது, Fit-ஆக (தசை வலிமை மற்றும் சரியான இதய சுவாச நிலையுடன்) இருப்பது போல் தெரிந்தால், அவருக்கு எந்த நோயும் இருக்காது என்று நாம் அடிக்கடி தவறாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், உடல் தகுதி உடையவர் மிகவும் ஆரோக்கியமற்றவராகக் கூட இருக்கலாம்”, என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர்.சுதிர் குமார் India Today நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் Fit-ஆகவும், அதிக எடையைத் தூக்கும் திறன், சிக்ஸ் பேக் மற்றும் தசை வலிமையுடன் அற்புதமான உருவ அமைப்புடனும் இருக்கலாம்; ஆனால் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு தகுதிகள் கிடையாது”, என்று சுகாதார நிபுணர் லுக்கா குடின்ஹோ கூறியுள்ளார்.
Representative Image
ஆரோக்கியமாக இருப்பது என்பது உடல், மனம் மற்றும் உணர்ச்சி அம்சங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த நல்வாழ்வைக் குறிக்கிறது.
“ஒருவருக்கு மகிழ்ச்சியின்மை, மன அழுத்தம், நெகிழ்வுத்தன்மை, மனதளவில் சமநிலை இல்லாத நிலையில் இருந்தால், அவர் Fitness Freak-ஆகவே இருந்தாலும் கூட அவர் ஆரோக்கியமானவர் இல்லை”, என சுகாதார நிபுணர் லூக் குடின்ஹோ தெரிவித்துள்ளார்.
பலருக்கு உடல் நிறை குறியீட்டெண் (BMI) இயல்பான அளவான 25 புள்ளிகள் இருந்தாலும், “வளர்சிதை மாற்றத்தில் பருமனாக”(Metabolically obese) இருக்கவும் வாய்ப்புள்ளதாக நரம்பியல் நிபுணர் டாக்டர்.சுதிர் குமார் கூறியுள்ளார்.
நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதைப் அறிந்துகொள்ள, நமது இன்சுலின் எதிர்ப்பு, இரத்த அழுத்தம் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு (இதய ஆரோக்கியம்) ஆகியவற்றைச் சரிபார்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்து மூன்றும், நாம் உண்மையில் எந்தளவு ஆரோக்கியத்துடன் உள்ளோம் என்பதை காட்டும்.
மேலும், அதிக வேலை செய்வது உடலை ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2021-ல் Lancet வெளியிட்ட ஆய்வில், ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 13% அதிகமாகவும், பக்கவாதம் ஏற்படும் அபாயம் 33% அதிகமாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் உடற்பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்டாலும், போதுமான ஓய்வைப் பெறுகிறீர்கள் என்பதையும், சீரான உணவின் மூலம் உங்கள் உடல் நலத்தைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News Courtesy: India Today