சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் அமீருல் இஸ்லாமுக்கு மரணத்தை உறுதி ஆகியிருக்கும் நிலையில் அவரை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கின்றன. அமீருலை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று உயிரிழந்த மாணவி தாயாரும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் தூக்கிலிடப்படும் 27வது குற்றவாளியாக அறியப்பட்டிருக்கிறார் அமீருல் இஸ்லாம். கேரளாவில் கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் ரிப்பர் சந்திரன் என்றிருந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு பின்னர் கேரளாவை அதிரவைக்கின்றன அமீருல் இஸ்லாமின் மரண தண்டனை.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெரும்பாவூர் அருகே குருப்பம்பாடியைச் சேர்ந்த 30 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவி கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி அன்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பிரேத பரிசோதனையில் அந்த மாணவியின் உடலில்38 காயங்கள் இருந்தது தெரியவந்தது. ஆள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் குற்றவாளியை தேடி வந்த நிலையில், அசாமைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அமீருள் இஸ்லாம்தான் குற்றவாளி என்பது தெரியவந்தது. 49 மாதங்களுக்கு பின்னர் குற்றவாளி அமிரூல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் 38 காயங்கள் இருந்தன. நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அதே ஆண்டு ஜூன் 16ஆம் தேதி குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆனாலும் மாணவி ஜிசாவை தனக்கு யார் என்றே தெரியாது . தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று அமீருல் மறுத்தார்.
வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்து வந்த நிலையில், அசாமில் உள்ள தனது மனைவியும் பெற்றோரும் வறுமையில் உள்ளதால் கேரளாவின் விய்யூர் சிறையில் தன்னை வந்து பார்த்துச்செல்ல சிரமமாக உள்ளதால், தன்னை அசாம் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது.
இதற்கிடையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் அமீருல்தான் குற்றவாளி என்பது நிரூபனம் ஆனது. அது தொடர்பாக 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 2016ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு பின்னர், 2027ம் ஆண்டில் அமீருள் இஸ்லாமுக்கு மரண தண்டனை அளித்தது கீழமை நீதிமன்றம்.
இந்த தண்டனையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அமீருல் இஸ்லாம். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தது கேரள உயர்நீதிமன்றம்.
இதையடுத்து அமீருல் இஸ்லாமுக்கு விரைவில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கல் குரல் எழுப்பி வருகின்றனர். தன் மகள் சாவுக்கு காரணமான அமீருள் இஸ்லாமை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார் உயிரிழந்த மாணவியின் தாயார்.
கேரளாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விய்யூர், கண்ணூர், பூஜாப்புரா மத்திய சிறைகளில் அடைக்கப்படுவது வழக்கம். இதில் கண்ணூரில் இரண்டு தூக்கு மேடையும், பூஜாபுராவில் ஒரு தூக்குமேடையும் உள்ளன. இதுவரைக்கும் இந்த இரண்டு இடங்களிலும் 26 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் 14 பேரை சுத்தியால் தலையில் அடித்துக்கொன்ற ரிப்பர் சந்திரன் கண்ணூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு முன்னதாக பூஜாப்புர மத்திய சிறையில் மாந்திரீகத்திற்காக குழந்தைகளைக் கொன்ற களியக்காவிளை அழகேசன் 1979ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார். இதில் ரிப்பர் சந்திரனுக்கு அடுத்ததாக அமீருல் இஸ்லாம் தூக்கிலிடப்பட இருக்கிறார்.