கடுமையான FCRA சட்ட விதிகளையும் மீறி இந்துத்துவா ஆதரவு செய்தி நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளை பெற்று வருகின்றனர்.
கடந்த 9 ஆண்டுகளில் 16,000-க்கும் மேற்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவங்கள்(NGOs) இந்தியாவின் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தை (FCRA) மீறியதாக தெரிவித்து உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
NGO-க்களுக்கு கடுமையான FCRA விதிகள் இருந்தபோதிலும், சில இந்துத்துவா இணையதளங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற்றுவருவது சட்டம் மற்றும் நெறிமுறை கேள்விகளை எழுப்புவதாக, Bellingcat செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.
பாஜக ஆதரவு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற செய்தி இணையதளமான OpIndia, இந்து தேசியவாதத்தை ஊக்குவித்தும், சிறுபான்மையினரை குறிவைத்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.
“Voluntary Payment” முறையில் பயனர்களிடம் இருந்து நிதியை பெரும் OpIndia, அவை நன்கொடைகள் அல்ல என்றும் பயனர்களிடம் இருந்து வரும் கட்டணம் எனக் கூறுகிறது.
ஆனால், OpIndia-வின் கட்டண மாதிரி FCRA விதிமுறைகளின் கீழ் வர வேண்டிய ஒன்று என்பதால், அந்த விதிகளுக்கு இணங்க வேண்டியது அவசியம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
OpIndia-வுக்கு நிதியளிப்பவர்கள் PayPal மூலம் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் நிலையில், FCRA விதிகளின் கீழ் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை.
உபேந்திர பிரம்மச்சாரியால் நடத்தப்படும் ‘Hindu Exixtence’ இணையதளமும் PayPal மூலம் நன்கொடைகளை பெற்று வருகிறது.
மற்றொரு இந்துத்துவா தளமான ‘Hindu Post’, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘இந்து மீடியா அறக்கட்டளை’ மூலம் வெளிநாட்டு நன்கொடைகளை பெற்றுவருகிறது.
சஞ்சய் தீட்சித்தால் தொடங்கப்பட்ட ‘Jaipur Dialogues’ இந்துத்துவா இணையதளம் ‘JD Digital’ நிறுவனம் மூலம் கணிசமான வெளிநாட்டு நிதியை பெற்றுவருகிறது.
FCRA சட்டத்தை மீறியதாக ஆயிரக்கணக்கான NGO-க்கள் இந்திய அரசால் மூடப்பட்ட நிலையில், இந்துத்துவா இணையதளங்கள் வெளிநாட்டு நிதிகளை சேகரிக்க PayPal மற்றும் Donorbox-ஐ பயன்படுத்துவதாக, Bellingcat செய்தி நிறுவனம் கூறியுள்ளது.