மக்களவைக்கு இன்று கடைசிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதிகளில் இன்று கடைசிக்கட்ட அதாவது 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய முதல் கட்ட தேர்தல் இன்று ஜூன் 1ம் தேதி 7வது கட்ட தேர்தலுடன் மக்களவை -2024 தேர்தல் முடிவுக்கு வருகிறது.
முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும், 2வது கட்ட தேர்தலில் 66.71 சதவிகித வாக்குகளும், 3வது கட்ட தேர்தலில் 65.68 சதவிகித வாக்குகளும், 4வது கட்ட தேர்தலில் 69.16 சதவிகித வாக்குகளும், 5வது கட்ட தேர்தலில் 62.20 சதவிகித வாக்குகளும், 6வது கட்ட தேர்தலில் 63.36 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், இன்று நடைபெறும் கடைசிக்கட்ட தேர்தலுக்கு பின்னர் இன்று மாலை 6 மணிக்கு மேல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
இன்றுடன் மக்களவைத் தேர்தல் நிறைவடையும் நிலையில் நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது சுங்க கட்டணம். ஏப்ரல் , செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்படும் இந்த சுங்கட்டணம் தேர்தலால் ஜுன் மாதத்தில் உயர்கிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியே நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்கிற அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனாலும் கடைசிநேரத்தில் அந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றுடன் தேர்தல் நிறைவு பெறுவதால் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் சுங்க கட்டணம் உயர்கிறது.