தேர்தலுக்காக அவசரகதியில் கட்டி திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் கருவறை மேற்கூரை மழை பெய்ததில் ஒழுகுது. முறையான வடிகால் வசதி கட்டுமானம் இல்லாததால் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது என்று தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா கவலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கோட்டை என்று அக்கட்சியினரால் சொல்லப்பட்டு வந்தௌ உத்தரபிரதேசத்தில் அயோத்தி நகரில் 1999ல் பாபர் கோவில் இடிக்கப்பட்ட அந்த இடத்தில் 1800 கோடி ரூபாய் செலவில் பாஜக அரசால் ராமர் கோயில் பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளுக்கு பின்னர் கட்டப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு இக்கோவிலின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. மக்களவை தேர்தலுக்கு இந்த ராமர் கோயிலை வைத்துதான் வாக்குகளை அள்ள வேண்டும் என்று நினைத்த பாஜக, கட்டுமானப்பணிகள் முடிவடையும் முன்பாகவே, அவசர அவசராம கட்டுப்மானப்பணிகளை முடித்து கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி என்று கும்பாபிஷேகம் செய்தது.
இதற்காக நாடு முழுவதும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு நாடே அன்றைய தினம் ராமர் கோயிலை பற்றி பேசும் விதமாக செய்தது பாஜக. ஆனால், அவசரகதியில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆகம விதிகளுக்கு முறணான செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் லாபத்திற்காகவே பாஜக இந்த செயலை செய்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
எந்த ராமரை வைத்து பாஜக அரசியல் செய்ததோ அந்த ராமரே கைகொடுக்கவில்லை. மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது. அதிலும் ராமர்கோயில் அமைந்திருக்கும் உத்தரபிரதேசத்தில் பாஜகவின் கோட்டை இமேஜ் முற்றிலும் சரிந்தது.
1800 கோடி ரூபாய் செலவழித்து, இப்படி அவசர அவசரமாக கட்டப்பட்ட ராமர் கோவிலின் கருவறை மேற்கூரை மழையில் ஒழுகுவதாகவும், மழை நீர் கோவிலுக்குள் வருகிறது. ராமர் சிலை முன்பாக அமர்ந்து பூசாரிகள் பூஜை செய்யும் இடத்தில் மழை நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்குள்ளாகிறார்கள்.
கோவிலுக்குள் வந்த மழைநீர் வடியாத அளவிற்கு முறையான வடிகால் கட்டுமானமும் இல்லை என்று அக்கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா கவலையுடன் கூறியிருக்கிறார்.
இதனால், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் பாஜக மிகப்பெரும் ஊழல் செய்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை ராமர் கோயிலின் கட்டுமான குழு தலைவர் ஸ்ரீ நிருபேந்திர மிஸ்ரா மறுத்துள்ளார். ‘’ராமர் கோயிலின் முதல் மாடியில் மழை நீர் வழிவதைபார்த்தேன். இரண்டாம் தளத்தில் உ ள்ள குரு மண்டபத்தில் மேற்கூரை திறந்திருப்பதால் தண்ணீர் வந்திருக்கலாம். முதல் தளத்தில் வேலை நடந்து கொண்டிருப்பதால் அந்த வழித்தடத்தில் சிறிது நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. 2025 ஜுலைக்குள் வேலைகள் முடிந்ததும் அது சரியாகிவிடும்’’ என்கிறார்.
ஆனால், முதல் மழைக்கே இப்படி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தால், கனமழையில் பூஜையே செய்ய முடியாதே என்று கவலைப்படுகிறார் தலைமை பூசாரி. இரண்டாம் தர கட்டுமானப்பணிகளை பாஜக செய்வதால் சாலைகள், பாலங்கள் எல்லாம் இடிந்து விழுகின்றன. அதுபோலவே அயோத்தியிலும் இரண்டாம் தர கட்டுமானப்பணிகளை பாஜக செய்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.