பாஜக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுகின்றன, புதிதாக கட்டப்பட்ட விமான முனையங்களின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கொட்டுகின்றன, புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் மழை நீர் ஒழுகுது, புதிதாக தயார் செய்யப்பட்ட ரயிலில் மழை நீர் கொட்டுது. நீட் தேர்வில் கேள்வித்தாள் லீக் ஆகுது. இவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.
பாஜக ஆட்சியில் கட்டப்படும் கட்டுமானங்கள் வீக் ஆகவும், லீக் செய்தும் வருவதால், புதுசா விட் ரயிலும் லீக் , கட்டுன கோவில் கூரையும் லீக், கட்டுன பாலம் லீக், போட்ட ஹைவே ரோடும் லீக், புதுசா கட்டுன ஏர்ப்போர்ட் லீக், தேர்வு நடத்துன நீட் வினா தாள் லீக் என்ற நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பழைய ரயில்களும், புதிய ரயில்களும் மழைக்காலங்களில் ஒழுகுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை – சென்னை சென்ற சதாப்தி ரயிலில் மழை நீர் ஒழுகியது. திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் கோவை -மயிலாடுதுறை ஜன சதாப்தி ரயிலில் மழை நீர் ஒழுகி பயணிகள் கடும் அவதியுற்றனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ரயிலிலும் மழை நீர் ஒழுகி பயணிகள் கடும் அவதிக்குற்றனர்.
பழைய ரயில்களில்தான் நிலைமை இப்படி என்றால், வட மாநிலங்களில் உள்ள அதிவேக பயணிகள் புதிய ரயிலின் மேற்கூரையில் இருந்து மழை சடசடவென்று பெய்து பயணிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரயிலுக்குள் மழை கொட்டியதால் குடை பிடித்துக்கொண்டே ஓட்டுநர் ரயிலை இயக்கிய கொடுமையும் பாஜக ஆட்சியில் அரங்கேறின.
பீகாரில் 9 நாளில் 5 பாலங்கள் இடிந்து விழுந்து பாஜகவின் முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. அம்மாநிலத்தில் பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழும் சம்பவங்களால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அராரியா, கிழக்கு சம்பாரண், சிவான் மாவட்டங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாலம் உள்பட மூன்று பாலங்கள் இடிந்த விழுந்தன மதியா ஆற்றின் மீது கட்டப்பட்ட இருந்த பாலமும் இடிந்து விழுந்தது.
டெல்லி, ம.பி., குஜராத் என்று தொடர்ந்து 3 நாட்களில் விமான நிலைய மேற்கூரை இடிந்துவிழுந்துள்ளது. ஜூன் 27ம் தேதிஅன்று மத்திய பிரதேசம் ஜபல்பூர் விமான நிலைய புதிய முனைய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து ஜூன் 28 தேதி தலைநகர் டெல்லியில் பெய்த பலத்த மழையினால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை பகுதி முனையம் -1ல் கூரை இடிந்து பல கார்களின் மீது விழுந்தது. இதில் டாக்சி டிரைவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று 29ம் தேதி கடந்த 2023ல் பிரதமர் மோடி திறந்து வைத்த குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரையும் கனமழையினால் இடிந்து விழுந்துள்ளது.
பிரதமர் மோடியால் கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்ட லக்னோ விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் மழைநீர் கொட்டுகிறது.
1800 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்டு அயோத்தியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ராமர் கோயிலும் ஒழுகுது. ராமர் சிலை முன்பாக பூசாரிகள் பூஜை செய்யும் இடத்தில் மழை நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்குள்ளாகிறார்கள்.
கோவிலுக்குள் வந்த மழைநீர் வடியாத அளவிற்கு வடிகால் கட்டுமானமும் முறையாக இல்லை என்று ராமர் கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா கவலை தெரிவித்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐந்து மாதத்திலேயே ஒழுகுது என்கிறார்கள். ஐந்து மாதம் தாங்கியதே பெரிய விஷயம்தான். ஐந்து மாதம் தாங்கியதே பெரிய விஷயம்தான் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் கேள்வித்தாள் லீக் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவில் மூளையாக செயல்பட்ட பாஜக பிரமுகர்கள் கைதாகி உள்ளனர். அரியானா மாநிலத்தில் பாஜக பிரமுகரின் பள்ளியில் 6 மாணவர்கள் 100% மார்க் எடுத்ததில் அப்பள்ளியில் முறைகேடு நடந்தது அம்பலமாகி உள்ளது.