தான் கடைப்பிடித்து வரும் மருத்துவ முறை குறித்து சமூக வலைத்தளத்தில் நடிகை சமந்தா பகிர்ந்தது சர்ச்சையானது. மருத்துவர்கள் இதை கண்டித்து, சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்க, சிறையில் தள்ளும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன் என்று சமந்தா அளித்த விளக்கமும் சர்ச்சையாகி கண்டனம் வலுத்து வருகிறது.
அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் சமந்தா. அந்த புகைப்படத்தில் நெபுலைசர் கருவியை மூக்கில் வைத்தவாறு இருந்தார். வைரல் காய்ச்சலுக்கு சாதாரண மருந்துகளை உட்கொள்வதற்கு பதில் ஹைட்ரஜன் பெராக்சைடு , காய்ச்சி வடிகட்டிய நீர் கலவையுடன் நெபுலைஸ் செய்தாலே , சுவாசித்தாலே நோய் குணமாகிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
சமந்தாவின் இந்த பதிவு சர்ச்சையானது. மருத்துவம் குறித்த தெளிவில்லாமல் சொல்கிறார் சமந்தா. ஹைட்ரஜன் பெராக்ஷைடை சுவாசித்தால் உடலுக்குக் தீங்குதான் விளையும். எந்த நன்மையும் கிடையாது. அதை பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்காவில் உள்ள ஆஸ்துமா அறக்கட்டளை நிறுவனம் எச்சரித்துள்ளது. சமந்தாவுக்கு சிறை தண்னையும் அபராதமும் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
தன்னை லட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளத்தில் பின்பற்றுகிறார்கள் என்ற நிலையில் இப்படி செய்திருக்கும் சமந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் டாக்டர் லிவர் டாக்.
இதற்கு விளக்கம் அளித்த சமந்தா, நான் பிரபலமானவர் என்ற அர்த்தத்தில் எதையும் சொல்லவில்லை. மருத்துவர்கள் பரிந்துரையில் நான் எடுத்துக்கொண்ட சிகிச்சையில் எனக்கு திருப்தி இருந்ததால்தான் மற்றவர்களுக்கும் இது பலனளிக்கும் என்ற வகையில்தான் தெரிவித்தேன். தவறாக இதை வைத்து பணம் ஈட்டும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், நான் பிரபலமாக இருப்பதால் இப்படி எதிர்க்கின்றனர். அந்த மருத்துவர் நல்ல நோக்கத்திற்காக சொல்லி இருக்கிறார். ஆனால் அவரது வார்த்தையில் கனிவு இல்லை. என்னை சிறையில் தள்ள வேண்டும் என்கிறார். அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை. சிறையில் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ், விளக்கம்கொடுக்கிறேன் என்ற பெயரில் விக்டிம் கார்டையே பயன்படுத்தி இருக்கிறார் சமந்தா. பிரபலங்கள் பலர் மருத்துவம் பற்றி நன்கு அறிந்தது மாதிரி சமூக வலைத்தளத்தில் சொல்லி வருகின்றனர். இவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே என்னை மாதிரி மருத்துவர்கள் கொஞ்ச நேரம் செலவிட வேண்டியதாக இருக்கிறது. சமந்தா தனது குறிப்புகளை டெலிட் செய்துவிடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.