இட ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி UPSC தேர்வில் தகுதி பெற்றதாக பல ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1) பூஜா கேத்கர் (IAS)
Batch – 2022
இட ஒதுக்கீடு – ஓபிசி (மாற்றுத்திறனாளி)
போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றும், தனது தந்தை முன்னாள் அரசு பணியாளர் என்பதை மறைத்து சட்டவிரோதமாக OBC (Non Creamy Layer) சான்றிதழ் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.
2) அபிஷேக் சிங் (IAS)
Batch – 2010 (AIR – 94)
இட ஒதுக்கீடு – பொது (லோகோமோட்டிவ் குறைபாடு)
லோகோமோட்டிவ் குறைபாடுகள் உள்ளதாக சான்றிதழ் பெற்றுள்ள அபிஷேக் சிங், அந்த குறைபாடு உள்ளவர்கள் செய்ய முடியாத அனைத்தையும் செய்து சமூக ஊடக கணக்குகளில் பதிவேற்றி வந்துள்ளார்.
3) ஆசிப் கே யூசுப் (IAS)
Batch – 2020(IAS)
இட ஒதுக்கீடு – EWS
போலி OBC (Non Creamy Layer) சான்றிதழைப் பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியான ஆசிப் கே யூசுப், 2020-ல் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, போலிச் சான்றிதழைப் பயன்படுத்தி ஐஏஎஸ் பதவியைப் பெற்றார் என்பது நிரூபிக்கப்பட்டது.
4) பிரியன்ஹு காதி (IAS)
Batch – 2021
இட ஒதுக்கீடு: பொது (எலும்பியல் குறைபாடு)
எலும்பியல் குறைபாடு மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு பிரிவின் கீழ் பணியமர்த்தப்பட்ட பிரியன்ஹு காதி, குறைபாடு உள்ளதாக கூறி போலி சான்றிதழ் பெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.
5) அனு பெனிவால் (IPS)
Batch – 2021
இட ஒதுக்கீடு – EWS
அனு பெனிவாலின் தந்தை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள நிலையில், EWS கோட்டா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
6 ) நிகிதா கண்டேல்வால் (IAS)
Batch – 2014
இட ஒதுக்கீடு – பொது (பார்வை குறைபாடு )
பார்வையற்றோர் ஒதுக்கீட்டின் கீழ் பொதுப் பிரிவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிகிதா, கண்ணாடி அணியாமல் எப்படி ஓட்டுநர் உரிமம் பெறும் தேர்வில் ஈடுபட்டார் என்பது சர்ச்சையாகி உள்ளது.