அந்த ஆடியோவில் உள்ளது உங்கள் குரல் மாதிரியே இருக்குதே? அது நீங்கள் பேசியதுதானா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ’’நேத்து பூரா வெளியே ஒரு இடத்துல இருந்தேன். அதை கேட்டுவிட்டு தலைவரே என்னை தொடர்பு கொண்டிருக்கிறார். அதுவும் தெரியாம போச்சு. அந்த ஆடியோவை கேட்டுவிட்டு அதப்பத்தி சொல்றேன்’’ என்று நழுவினார் செல்லூர் ராஜூ.
அதிமுகவின் கோட்டை என்று இருந்தது மதுரை. அங்கே அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் செல்லூர் ராஜூ. அதனால் அவரின் மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகியும் செல்லூர் ராஜூவின் முன்னாள் உதவியாளருமான ராம சுப்பிரமணியன் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த அலை ஓய்வதற்குள் செல்லூர் ராஜூவும் ராம சுப்பிரமணியனும் பேசிக்கொள்வது மாதிரி ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதிமுக இளைஞரணி நிர்வாகி ராம .சுப்பிரமணியனும் பேசிக்கொள்வது மாதிரியான அந்த உரையாடல்:
‘’ஏண்டா நிலையில்லாம இருக்கே.. நாய் எங்கடா ஒரு இடத்துல விசுவாசமா இருந்துச்சு’’
‘’நீங்களா நானா..’உங்களுக்கே நாங்கதான் வேலை பார்த்தோம்’’
‘’21 எலெக்ஷன்ல நான் வேலை பார்த்திருக்கேன்’’
‘’21 எலெக்ஷன்ல அப்டியே கிழிச்ச நாயே…தினகரனுக்கு போயிட்டியேடா நாய்’’
‘’21 எலெக்ஷனுக்கு எங்கங்க தினகரனுக்கு போனேன்’’
‘’என்கிட்ட வேலை கேட்குற..வேலைக்கு எடுக்க மாட்டேன்னுண்டேன்’’
‘’உங்ககிட்ட யாருங்க வேலை கேட்டது. ..’’
‘’உன்ன தொலைச்சிபுடுவேண்டா நாயே’’
‘’ பார்ப்போம்..பார்ப்போம்…’’
‘’திருப்பரங்குன்றத்துல வேலை பார்த்துட்டு இங்க வந்து என்னடா பேச்சு நாயே’’
‘’முதல்ல திருப்பரங்குன்றத்துல வேலை பார்த்தது தெரியாதா?’’
‘’என்னடா வரல..நொரலன்னு…’’
’’முதல்ல கூட வச்சிருந்தப்ப தெரியாதா…?’’
‘’இந்த சில்மிஷம் பண்ண..தொலைச்சிப்புடுவேன் பார்த்துக்க..’’
‘’என்ன செய்வீங்க?’’
‘’கட்சிக்காரனுக்கு தெரியும்டா; நான் வேலை பார்த்தேனா இல்லையாங்குறது…’’
‘’கட்சி வேலை பார்த்தப்ப சொல்லி இருக்கணும். நீ இங்க வராத.. திருப்பரங்குன்றத்துலேயே பாருன்னு..’’
‘’நீ எப்படா இங்க வந்து வேல பார்த்த…பார்லிமெண்ட் எலெக்ஷன்ல என்னைக்கிடா வந்து வேல பார்த்த…’’
‘’அப்புறம் எதுக்கு என்னைய கவுண்டிங் ஏஜெண்டா கூப்பிட்டீங்க?’’
‘’நாயி உன்னைய எப்பட கூப்பிட்டேன்..’’
‘’அப்புறம் எதுக்கு என்னைய போட்டோ கொடுக்க சொன்னீங்க..?’’
‘’ஏ நாயி உன்னைய எதுக்குடா போட்டோ கொடுக்க சொன்னேன்?’’
‘’என் வேலையில குறை சொன்னா நீ எல்லாம் கட்சிக்காரனாடா? நாயி நீ எல்லாம் பேசுற? நீ எல்லாம் விசுவாசியாடா?’’
‘’ஆமா, விசுவாசிதான்’’
’’கம்யூனிஸ்ட்ல இருந்த வந்தவண்டா நீ.. ஒரு இடத்துல கூட விசுவாசம் இல்லாத நாயிடா. ’’
’’கம்யூனிஸ்ட்ல இருந்தது எல்லாம் 18 வருசமாச்சுங்க. நீங்க பழைய கதைய எல்லாம் பேசிக்கிட்டு இருக்காதீங்க.’’
‘’உன் வீட்டுக்கு வேலை வாங்கி கொடுத்தது நாங்கடா’’
‘’நீங்களா வேலை வாங்கி கொடுத்தீங்க. அதெல்லாம் அம்மா சி.எம்.செல் மூலமா வந்துச்சு’’
’’ஆமா, கிழிச்சாங்க’’
’’டேய்..உன்னைய எனக்கு முதல்லேயே தெரியும்டா. அதனாலதான் உன்னைய வெறட்டி விட்டேன். நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளாடா?’’
‘’நீங்க எங்க என்னைய விரட்டி விட்டீங்க. நானா போனேன். நீங்க தொண்டனுங்ககிட்ட அடிக்கிற கொளையெல்லாம் பார்த்து நான் வேணாம்னு போனேன்’’
– என்று செல்லூர் ராஜூவும் ராம சுப்பிரமணியனும் பேசிக்கொள்வது மாதிரி நீள்கிறது அந்த ஆடியோ. அந்த ஆடியோவில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளை உதிர்த்துள்ளார் செல்லூர் ராஜூ.
இந்த ஆடியோவில் உள்ள குரல் உங்கள் குரல்தானா? என்ற கேள்விக்குத்தான் நான் இன்னும் அதை கேட்கவில்லை என்று நழுவினார் செல்லூர் ராஜூ.