உங்கள் பயணத் திட்டங்கள் திடீரென ரத்து செய்யும் சூழல் ஏற்படும்போது, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை பிறருக்கு மாற்றலாமா என யோசித்தது உண்டா? எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்!
உங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை உங்களின் குடும்ப உறுப்பினரின் பெயருக்கு சுலபமாக மாற்றலாம்.
இந்திய ரயில்வே துறை நிர்வாகம், நமது பெயரில் முன்பதிவு செய்த டிக்கெட்டை குடும்ப உறுப்பினரின் பெயருக்கு மாற்ற அனுமதிக்கிறது.
குடும்ப உறுப்பினருக்கு IRCTC டிக்கெட்டை மாற்றும் முறை:
டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்படுகிறதோ, அந்த பயணி முன்பதிவு செய்தவரின் இரத்த உறவினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் மட்டுமே இது அனுமதிக்கப்படுகிறது.
- அப்பா
- அம்மா
- சகோதரன்
- சகோதரி
- மகன்
- மகள்
- கணவன்
- மனைவி
உள்ளிட்ட இரத்த உறவினருக்கு மட்டுமே ரயில் டிக்கெட்டை மாற்ற அனுமதிக்கப்படுகிறது.
இந்திய ரயில்வேயின் டிக்கெட் பெயர் மாற்ற விதிகளின் படி, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் முன்பதிவு செய்யப்பட்டாலும், ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டருக்கு நேரடியாக வந்து மட்டுமே பெயர் மாற்ற முடியும்.
யாருடைய பெயரில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதோ, அந்த நபர் டிக்கெட்டின் நகலோடு, ஆதார் நகல் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த நகல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ரத்த உறவினரின் பெயருக்கு டிக்கெட் மாற்றப்படும்.