ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வருகிறார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேரணி நடத்தி, எங்களை மீறி சென்னையை இனி யாரும் ஆள முடியாது என்று சவால் விட்டபடி, அடுத்து வரும் தேர்தல்களில் சென்னையின் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
பொற்கொடியை தேர்தல் களத்தில் இறக்கினால் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு வருகின்றனர். பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி திமுக அரசை விமர்சித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு பிரிவினர், திமுகவுக்கு எதிராக, குறிப்பாக முதல்வருக்கு எதிராக, முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லி வருகின்றனர்.
ஆனால், ஆனந்தன் இதை மறுக்கிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பொற்கொடி போட்டியிடப்போவது உறுதி. அவர் போட்டியிடும் தொகுதி பெரம்பூரா? கொளத்தூரா? என்பது பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்கிறார் ஆனந்தன்.