
கோட் படத்திலிருந்து இதுவரையிலும் இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் அதிக வரவேற்பினை பெறாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை குறைத்திருக்கிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
மூன்றாவது பாடலாவது தங்களை திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. விரைவில் மூன்றாவது பாடலை வெளியிடுவதற்கான வேலைகளை செய்து வருகிறது கோட் குழு.

இதற்கிடையில், கோட் படத்தின் முதல்பாதி காட்சிப் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் அதை விஜய் பார்த்திருக்கிறார். இடைவேளை வரைக்குமான படத்தை அமைதியாகப் பார்த்து ரசித்த விஜய், இடைவேளை என்ற டைட்டில் வந்ததும் எழுந்து நின்று கைதட்டி இருக்கிறார்.
விஜய் என்ன சொல்வாரோ? என்று பதைபதைப்பில் நின்றிருந்த இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அப்போதுதான் நிம்மதிப்பெருமூச்சு வந்ததாம்.