முதுகலை மருத்துவப் படிப்புகளில் சிலவற்றில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. இதற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசுக்கு மருத்துவர்கள்பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
10 முதுகலை படிப்புகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அரசாணை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், வரும் ஆண்டுகளில் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணையினால் 20 துறைகளில் மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்தது. இதனால் அரசு மருத்துவர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பிலான அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்த அரசு, அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் அரசு மருத்துவர்களும், மருத்துவ சங்கத்தினரும் மகிழ்ந்துள்ளனர். இதற்காக அவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.