எந்த நாட்டுக்குப் போகப்போகிறார் ஷேக் ஹசீனா என்பதில் இப்போது வரையிலும் குழப்பம் நீடித்து வருகிறது. அனுமதி தருவதில் பிரிட்டன் முழுவதுமாக பின்வாங்கிவிட்டால் அடுத்து சவுதி அரேபியாவா? கத்தாரா? பெலாரஸா? என்பது குறித்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
வங்கதேசத்தில் தப்பி வந்து டெல்லியில் தஞ்சமடைந்திருக்கும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது இந்திய அரசு. தற்காலிகமாக டெல்லியில் ரகசிய இடத்தில் இருக்கும் ஹசீனா, லண்டனில் அகதியாக சென்று தஞ்சமடைந்துவிட முயற்சித்து வருகிறார்.
ஹசீனாவின் சகோதரி ரெஹானாவின் மகள் துலிப் சித்திக், பிரிட்டனின் குடியுரிமை பெற்று, அங்கே ஆளும் தொழிலாளர் கட்சியின் எம்.பியாகவும் உள்ளார். அதனால் லண்டனில் அகதியாக தங்குவதற்கு அனுமதி பெற்று சகோதரியுடன் வாழ முடிவெடுத்து பிரிட்டனில் அனுமதி கேட்டிருக்கிறார் ஹசீனா.
வங்கதேசத்தின் நிலையை கருதிய பிரிட்டன், இந்த நிலையில் பிரிட்டனில் ஹசீனா தங்குவது அவருக்கு பாதுகாப்பான இடமாக இருக்குமா? என்று நினைக்கிறது. வங்கதேசத்தில் ஹசீனாவுக்கு எதிரான விசாரணை நடந்தால் அங்கே ஹசீனா நேரில் செல்ல நேரிடும். இதற்காக சட்ட பாதுகாப்புகள் வழங்க வேண்டிய நெருக்கடிகளும் இருக்கும் என்று கருதும் பிரிட்டன், அப்படி ஒரு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியிருக்கிறது.
ஹசீனாவுக்கு அனுமதி தருவதில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக பின்வாங்கிவிட்டால், வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்திற்குச் செல்ல முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது. பின்லாந்திலும் ஹசீனாவுக்கு குடுப்ப உறுப்பினர்கள் உள்ளனராம்.
தவிர சவூதி அரேபியா, கத்தார், பெலாரஸ், ஐக்கிய அரபு எபிரேட்ஸ் நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிற்குச் செல்லலாம் என்றூம் அதுகுறித்து ஆலோசித்து வருகிறார் ஷேக் ஹசீனா.