பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவுக்கான தங்கப்பதக்கம் பறிபோனது. இது இந்தியர்களின் இதயத்தில் பேரிடியை ஏற்படுத்தியது.
100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் உடனடியாக அது குறித்து பிரதமர் மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் தொலைபேசியில் பேசி விபரத்தை அறிந்துள்ளார். அமித்ஷா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இதுகுறித்து வருத்தம்/வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்திய ஒலிம்பிக் கமிட்டியிடம் பேசி இருக்கிறார் பிரதமர் மோடி. 100 கிராம் எடை கூடியிருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகத் என்று இந்த விவகாரத்தில் எழுந்த கேள்விக்கு ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கம் தெரிவித்திருக்கிறார். முதல் நாள் பரிசோதனையில் சரியாக இருந்த எடை மறுநாள் பரிசோதனையில்தான் உடல் எடை கூடியிருக்கிறது. எலட்ரோலைட் பானம் அருந்தியதால் எடை கூடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் உடல் எடையைக்குறைக்க இரவு முழுவதும் கடும் பயிற்சியை எடுத்ததால் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் வினேஷ் போகத்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பஎம்பியுமான பிரிஜ் பூஷன், சரண் சிங் மீதுபாலியல் குற்றசாட்டினை முன்வைத்து இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார் வினேஷ் போகன். இந்த விவகாரத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்று, தனக்கு வழங்கிய கேல் ரத்னா மறும் அர்ஜூனா விருதுகளை திரும்ப அளித்துவிட்டார். இதற்காக பிர்தமர் அலுவலகத்திற்கு சென்றிருந்த போதுதான் அங்கே தடுக்கப்பட்டதால் 2 விருதுகளையுமே சாலையின் நடுவில் வைத்துவிட்டுச்சென்றார்.
கடந்த ஆண்டில் நடந்த கால் அறுவை சிகிச்சைக்குப்பின்னர் உடல் எடையை குறைத்து ஒலிம்பிக்போட்டியில் 50 கிலோ பிரிவில் பங்கேற்றிருந்தார். உடல் வலி , மன வலி என்று சொந்த நாட்டில் பல இன்னல்களை சந்தித்த போதிலும் கூட ஒலிம்பிக் போட்டியில் வென்று இந்தியாவுக்கு பெருமையைச்சூட்ட நினைத்தார் வினேஷ் போகத்.
இந்த தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்ய முடியாதபடியும் விதிகள் உள்ளன. இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக இருந்த வினேஷ் போகத் இந்த நிலைமையை சந்தித்திருக்கிறார்.
பாலியல் விவகாரத்தில் பாஜக எம்பியை எதிர்த்ததன் மூலமாக ஒட்டுமொத்த பாஜகவை கடுமையான விமர்சனம் செய்ததால், ஒன்றிய அரசு கொடுத்த விருதுகளை நடுரோட்டில் வைத்ததால் அந்த ஆத்திரத்தில் பாஜக அரசுதான் சதி செய்து பழிவாங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.