ஒன்பது மாநிலங்களில் பன்னிரெண்டு மாநிலங்களவை தொகுதிகள் காலியாக இருப்பதால் அத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானதால் அம்மாநிலங்கள் தேர்தல் பரபரப்பில் உள்ளன.
மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பியூஸ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 10 பேர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். இதனால் 10 மாநிலங்களவை தொகுதிகள் காலியாக உள்ளன. மேலும் ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 2 மாநிலங்களைவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.
காலியாக இருக்கும் அந்த 12 மாநிலங்களவை தொகுதிகளுக்கும் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கும் என்றும், 21ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும், 22ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
12 மாநிலங்களவை தொகுதிக்கும் செப்டம்பர் 3ம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.