பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்ததால்தான் வினேஷ் போகத் தகுதி நீக்கம் நடந்திருக்கிறது. இது திட்டமிட்ட சதி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ‘’மோடியை விமர்சித்தவர்…’’ என்ற கங்கனா ரணாவத் எம்பியின் பதிவு வைரலாகி வருகிறது.
100 கிராம் உடல் எடை கூடுதலாக உள்ளது என்ற குற்றச்சாட்டைக்கூறி பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கப்பதக்கம் பெறுவார் என்று இந்தியா ஆர்வத்துடன் இருந்த நிலையில் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி அவரை தகுதி நீக்கம் செய்வார்கள் என்று யாரும் நினைக்கவே இல்லை. இந்த காரணமும் பலரால் ஜூரணித்துக்கொள்ளவே முடியவில்லை.
ஆனால் இப்படி ஒரு காரணமும் இருக்கிறது என்பதை உணர்ந்து எதிர்காலத்தில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்கிறார் பாஜக எம்பி ஹேமமாலினி. 100 கிராம் எடை கூட பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் வினேஷ் போகத் 100 எடையை குறைக்க வேண்டும் என்கிறார் அவர்.
இந்நிலையில், வினேஷ் போகத் இறுத்தேர்வுக்கு தகுதி பெற்றது பாஜக எம்பி கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறின வினேஷ் போகத் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் போராட்டம் நடத்தினார். பாஜக, மோடிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வந்தார். இதனால்தான் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் சொல்லி வரும் நிலையில், கங்கணாவின் இந்த பதிவு அதை உறுதி செய்கிறது என்பதால் அப்பதிவு வைரலாகி வருகிறது.
அந்தப்பதிவில், ‘’மோடிக்கு எதிராக ‘மோடி தெரி கப்ர் குதேகி’முழக்கங்களை எழுப்பினார் வினேஷ் போகத். ஆனாலும் அவருக்கு சிறந்த பயிற்சியும் சிறந்த பயிற்சியாளர்களும், வசதிகளும் வழங்கப்பட்டது. அதனால்தான் மோடி சிறந்த தலைவர்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.