தமிழக அரசியலில் அதிமுக அந்தரங்கத்தில் தொங்குகிறது என்று அடித்து துவைக்கிறது பாஜக.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்ததில் இருந்தே அதிமுகவுக்கும் பாஜகவுக்காம உறவில் விரிசல் உண்டானது. கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை தாழ்த்தி பேசி வந்தார் அண்ணாமலை. இதற்கு அதிமுகவில் இருந்து கடும் எதிர்வினைகள் எழுந்தன. அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையேயான வார்த்தைப்போரில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படவில்லை.
பாஜகவை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அதிமுகவை தொடர்ந்து அண்ணாமலை கடுமையாக சாடி வருகிறார். அதிமுகவினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அண்ணாமலைக்குமான வார்த்தைப் போர் தடித்திருக்கிறது. உழைக்காமல் பதவி கிடைத்ததால் தலை,கால் புரியாமல் ஆடுகிறார் அண்ணாமலை என்று எடப்பாடி சொல்ல, காலில் விழுந்து பதவி வாங்கியவருக்கு என்னை குறைசொல்லை தகுதி இல்லை அண்ணாமலை கடுமையாகச் சொல்ல, அதிமுக – பாஜக இடையேயான வார்த்தைப்போர் உச்சக்கட்டத்திற்கு வந்திருக்கிறது.
39 வயதான தன்னைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததால், 70 வயதுடைய எடப்பாடி பழனிச்சாமியை பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார் அண்ணாமலை.
இதையடுத்து அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதிமுக சீனியர் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், ’’உதயகுமார், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, முனுசாமி போன்றவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடி, மனசுக்கு வந்தபடி பேசுகிறார்கள். வசை பாடுகிறார்கள். இதன் மூலம் நாங்களும் அரசியலில் இருக்கிறோம் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதை காட்டுவதற்காகவே அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது அவர்களுடைய இயலாமையைத் தான் காட்டுகிறது’’என்று சொல்லும் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், ’’உங்கள் விமர்சனங்களுக்கு எல்லாம் பயந்து அரசியல் செய்யாமல் இருந்து விடுவோம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். நீங்கள் தமிழக அரசியலில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்’’கடுமையாகச் சாடி இருக்கிறார்.
’’இப்படி தொடர்ந்து பேசுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க தயாராக இல்லை. உங்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம். உங்கள் மீது இருக்கிற வழக்குகள் விரைவுப்படுத்துவதற்கு நீதிமன்றங்களை நாடுவோம். உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வருவோம்’’என்று அதிமுகவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் கரு.நாகராஜன்.
இந்நிலையில் இன்றிரவு வெளிநாடு செல்லும் அண்ணாமலையோ, ‘’வெளிநாடு சென்றாலும் சண்டை தொடரும்’’ என்கிறார்.