சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தொழிலாளர்கள் துவங்கிய தொழிற்சங்கத்தை ஏற்க மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும் சிஐடியு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சிப்காட் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இந்த தொழிற்சாலையில் சாம்சங் தயாரிப்புகளான ஏசி, வாஷிங் மெஷின், டிவி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட தயாரிப்புகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது. இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்ல தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 85 நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சிஐடியூ சங்கத்தில் இருந்து வெளியேறி நிர்வாகம் அமைக்கும் கமிட்டியில் இணைந்தால் பரிசு பொருட்கள் கற்பனை செய்ய முடியாத உடனடி சம்பள உயர்வு
பணியாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் என்றெல்லாம்
தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிர்வாகம் விரும்பும் படிவத்தில்
கையைத்திடுவதற்கு தனியாகவும் கூட்டாகவும் நிறுவனம் பகிரங்கமாக தனது ஆதரவாளர்களை தொழிற்சாலைக்குள் இறக்கி வருவதாக கூறப்படுகிறது.
தொழிற் தகராறு சட்டம் அட்டவணை 5 விதிகளுக்கு எதிராக அன்ஃபர் லேபர் பிராக்டிஸ் நடவடிக்கையில் நிர்வாகம் பகிரங்கமாக இறங்கி செயல்பட்டது.
தொழிலாளர்கள் விரும்பி அமைக்கிற சங்கத்தை ஏற்க முடியாது என்றும் கமிட்டியாக இருங்கள் என்று மீண்டும் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லுவது தொடர்கதையாகவே இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
தொழிலாளர்களின் சட்ட பூர்வமான உரிமைகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய தொழிலாளர் துறை பகிரங்கமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்வைஸர் போலவே இக்காலத்தில் செயல்பட்டது செயல்பட்டு வருவது தொழிலாளர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருங்காட்டுக்கோட்டை தொழிலாள துறையின் செயல்பாடு கவலைக்குரியதாக இருந்து வருகிறது.
தொழிற்சங்கத்தை பதிவுக்கு அனுப்பினால் அதை காலதாமதம் செய்வதற்கு எல்லா நடவடிக்கைகளும் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கவே முடியாது என்ற நிலையை இன்றைய சூழ்நிலைக்கு சாம்சங் நிறுவனத்தின் நடவடிக்கை தள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
தொழிற்சாலை சட்டப்படி 8 மணி நேரம் வேலை என்பதற்கு மாறாக உணவு தேநீர் வேலை இல்லாமல் மேலும் 2 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, வேலை செய்தே ஆக வேண்டும் இல்லை என்றால் உங்கள் மீது பல விதமான நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர்கள் சொல்வதை கேட்பவர்களுக்கு பரிசு பொருளும் என்ற நடவடிக்கை தொழிலாளர்களை மேலும் கோபத்திற்குதள்ளியுள்ளது.
லோடிங் அன்லோடிங் என்ற பெயரில் தொழிற்சாலை அதிகாரிகாரியிடம் லைசன்ஸ் வாங்கிவிட்டு நேரடி உற்பத்தியில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்த
நிரந்தர தொழிலாளிகளை பயிற்சி கொடுங்கள் என்று கட்டாயப்படுத்துவது ட்ட விரோதம் என்று சொன்னால், ‘ஆம்’ அதை நாங்கள் செய்வோம் என்றுபேச்சு வார்த்தையில் நிர்வாகம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது வருகிறது.
இந்நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் திங்கட்கிழமை முதல் (செப்டம்பர் 9) சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.