தவெக முதல் மாநில மாநாடு நடத்த காவல்துறை 17 நிபந்தனைகளை விதித்திருக்கும் நிலையில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் விஜய்.
இம்மாதம் நடைபெற வேண்டிய தவெக முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. காவல்துறை விதித்த 33 நிபந்தனைகளை சமாளிக்க முடியாமல் இருந்த நிலையில் காவல்துறை அனுமதி தராமல் இருந்து வந்ததால் மாநாடு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த மாதத்திற்கும் காவல்துறை அனுமதி தரவில்லை. அனுமதி கடிதத்திற்கு இன்னும் எந்த பதிலும் வரவில்லை என்று தகவலும் பரவிய நிலையில், காவல்துறை அனுமதி அளிதிதுவிட்டது என்று செய்தி வந்தது.
மாநாட்டிற்கு சில தினங்களுக்கு பின்னர் தீபாவளி பண்டிகை வருகிறது என்பதால் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படும் என்று பலரும் சந்தேகம் தெரிவிக்க, மாநாடே எங்களுக்கு தீபாவளிதான் என்று சொல்லி வருகின்றனர் தவெகவினர்.
தீபாவளியை ஒட்டி தொடர் மழை பெய்யும் என்பதால் அந்த நேரத்தில் மாநாடு வைத்திருகிறாரே விஜய். எவ்வளவுதான் வேலை செய்தாலும் இடம் நாசமாகிவிடுமே. இதனால் முதல் மாநாடே சொதப்பிவிடுமோ என்றும் பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, மாநாட்டில் விளம்பர பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது , போக்குவரத்திற்கு இடையூறு தரக்கூடாது என்பன உள்பட தவெகவின் இந்த மாநாட்டிற்கு காவல்துறை 17 நிபந்தனைகள் விதித்திருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்ட விஜய், மாநாட்டிற்கு வரும் தன் தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அதில், மது அருந்திவிட்டு யாரும் மாநாட்டிற்கு வரக்கூடாது, போலீசாரை மதித்து நடக்க வேண்டும், விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் பகுதியில் இருக்கும் கிணறுகளுக்கு அருகே செல்லக்கூடாது என்பன குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடு தொடர்பாக சென்னையில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர்கள் பங்கிற்கு ஒரு நிபந்தனை போட்டுள்ளனர். மாநாட்டிற்கு வருவோர் அனைவரும் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் நிபந்தனை போட்டிருக்கிறார்கள்.