யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது மாதிரி, வேட்டையன் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் வச்சி செய்த போதே, ‘மாநாடு வரட்டும்; சம்பவம் இருக்கு’ என்று சபதம் எடுத்திருந்தார்கள் ரஜினி ரசிகர்கள்.
அதே மாதிரி இன்று விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநாட்டில் விஜய் அறிவுறுத்தலையும் மீறி நடக்கும் சம்பவங்களை பட்டியலிட்டு, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.
மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று விஜய் உத்தரவு போட்டிருந்தாலும், அதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, மாநாட்டு திடலிலேயே மது அருந்துகிறார்கள் தவெகவினர். தவெக கொடி கட்டிய வேன்கள், கார்கள், பேருந்துகள் எல்லாம் டாஸ்மாக்குகளை ஆக்கிரமித்துள்ளன.
மாநாட்டிற்கு பந்தல் போடாததால் தொண்டர்கள் வெயிலில் காய்ந்து போய், நாற்காலிகளை தலைக்கு வைத்து தப்பித்தனர். பலரும் தண்ணீருக்கு தவியாய் தவித்து மயங்கிச்சரிகிறார்கள்.
பல ஊர்களில் இருந்தும் வந்து காலையில் இருந்து மாநாட்டு திடலில் கூடிய தொண்டர்களுக்கு மேடையில் இருந்தபடியே பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி விசப்பட்டது தொண்டர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
இதை எல்லாம் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் தவெகவினரை வறுத்தெடுத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.