தற்கொலை செய்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் திரைப்பட இயக்குநர் செல்வராகவன் ஒரு வீடியோ பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் , ‘’தற்கொலை முயற்சி, மன அழுத்தம் இரண்டையும் பார்க்காதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை.
தற்கொலை முயற்சி என்று பார்த்தால் நான் 7 முறை தற்கொலை முயற்சி எடுத்திருக்கிறேன். அது இப்போது இல்லை. பல வருடங்களுக்கு முன்பு.
ஒவ்வொரு முறையில் ஆழ் மனதில் இருந்து ஒரு குரல் கேட்கும். பொறுமையாக இரு… பொறுமையாக இரு.. என்று அந்த ஆழ்மனக்குரல் சொல்லும். என்னமோ கேட்குது..கடவுள் ஏதோ சொல்கிற மாதிரி இருக்குது என்று நினைத்து கடந்து போய்விடுவேன்.
ஒரு பத்து நாள் கழித்தோ, ஒரு மாதம் கழித்தோ, ஒரு வருடம் கழித்தோ வாழ்க்கை அழகாக போய்க் கொண்டிருக்கும் போது, அன்றைக்கு தவறான முடிவு எடுத்திருந்தால் இன்றைக்கு இப்படி வாழ முடியாதே; அனுபவிக்க முடியாதே என்று நினைப்போம். இதுதான் வாழ்க்கை.
அடுத்த ஜென்மத்திலாவது நிம்மதியாக இருப்போம், வெளிநாட்டில் சொகுசு பங்களாவில் பிறப்போ என்பதுதான் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் எண்ணத்திற்கு எதிர்மாறாக கூவத்தில் பன்றியாக பிறந்துவிட்டால், காட்டில் மரத்தில் தொங்கும் பேயாக பிறந்துவிட்டால் என்ன செய்வது?
இறந்த பிறகு என்னவாக பிறப்போம் என்பது யாருக்குத் தெரியும். அதனால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
https://www.instagram.com/reel/DBp5CjTp4CX/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
மன அழுத்தத்தில் இருந்தால் உள்ளிருந்து, ஆழ் மனதில் இருந்து குரல் கேட்கும். அதைப்பற்றி கவலை வேண்டாம். மன அழுத்தத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு அது அதுபற்றி யாராவது கேட்டால் வெளிப்படையாக ஆமாம், நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள். ஒரு வாரத்தில் மன அழுத்தம் நீங்கிவிடும். அதை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்து மன அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள்’’ என்று பேசியிருக்கிறார் செல்வராகவன்.