பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை தவெகவின் அரசியல் வழிகாட்டிகளாக அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். அவர் ஏன் காயிதே மில்லத் இஸ்மாயிலை ஏற்கவில்லை? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.
அவர் மேலும் அதுகுறித்து, ‘’ விடுதலை போராட்ட வீரர், அப்பழுக்கற்ற தலைவர், சுதந்திர இந்தியாவின் சட்டங்களை இயற்றிய அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினர், இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி தமிழுக்கே உண்டு என்று அரசியல் நிர்ணயச் சபையில் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப். அவரை ஏன் வழிகாட்டியாக ஏற்கவில்லை? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
அதே போன்று தவெக மாநாட்டில் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் போன்றோரின் கட் – அவுட்களை வைத்து மரியாதை செய்திருந்தார் விஜய். வேலுநாச்சியாருக்கு துணை நின்று தோள் கொடுத்த ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு ஏன் மரியாதை செய்யவில்லை? அவர்களின் பெயரை ஏன் உச்சரிக்கவில்லை? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
பெரும்பான்மை வாதத்தினை தனது கோட்பாடாக வைத்துக்கொண்டு பிளவுவாதத்தினை இந்த மண்ணில் நிலைநிறுத்துவது பாசிச பாஜக மட்டுமே. மக்களை பிளவுபடுத்தும் பாசிச பாஜகவை விமர்சிக்காமல் பாசிசத்தை எதிர்ப்போரை பாயாசம் என்று கிண்டல் செய்வது யாரை மகிழ்ச்சிப்படுத்த? என்று கேட்கும் ஹவாஹிருல்லா , முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் வக்பு திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து ஏன் விஜய் அறிக்கை விடவில்லை? மணிப்பூரில் கிறிஸ்தவ இனப்படுகொலைகளை கண்டித்து குரல் எழுப்பினாரா? என்று கேட்கிறார் ஜவாஹிருல்லா.