தமிழ்தேசியம் என்கிற பெயரில் சாதிகளை கலப்படம் செய்கிறார் சீமான். ஒரு சாதியில் இருந்துதான் எல்லா சாதிகளும் வந்தன என்று சொல்லி எல்லா சாதியினரையும் அசிங்கப்படுத்துகிறார் சீமான். அதுமட்டுமல்லாமல் முப்பாட்டன், என் தாத்தா என்று அரசியல் தலைவர்களை உறவு முறை சொல்லி பேசுகிற அசிங்கமான போக்கு சீமானிடம் உள்ளது.
சாதிய தலைவராக முத்துராமலிங்க தேவரை அடையாளப்படுத்தக்கூடாது என்று சொன்னதோடு அல்லாமல், சீமான் சொன்ன பிறகுதான் பாண்டியர்கள் பற்றிய சர்ச்சைகள் எழுந்தன, முக்குலத்தோர் சமூகத்தில் அன்றைக்கு காமராஜர் எப்படி வன்மத்தை கக்கினாரோ அதே போன்று இன்றைக்கு சீமான் வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி பசும்பொன்னில் சீமான் கால் வைக்கக்கூடாது என்று முக்குலத்தோர் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இதனால் வெகுண்டெழுந்த சீமான், பசும்பொன்னுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அது முக்குலத்தோருக்கு மட்டும்தான் என்று பட்டா போட்டா வைத்திருக்கிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சீமான்.
இந்த நிலையில் பொன் முத்துராமலிங்க தேவரின் 117-ஆவது பிறந்த நாள் மற்றும் 62-ஆவது குருபூஜை நாளில் அவரது நினைவிடத்திற்கு சென்று அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் சீமானும் சென்றார்.
அப்போது முக்குலத்தோர் ஒன்று திரண்டு, ‘’சீமான் ஒழிக! சீமானே திரும்பிப் போ’’ என்று ஆவேசத்துடன் முழக்கமிட்டனர்.
இந்த ஆவேச முழக்கத்தினால் அங்கே சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.