ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று திருமாவளவன் முழங்கியது போது சம்பந்தப்பட்ட திமுகவே அதுகுறித்து பதில் எதுவும் சொல்லாதிருந்தபோது, அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொன்னார் ஜெயக்குமார்.
பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்று அண்ணாமலை சொன்னதை ஏற்காத எடப்பாடி தே.ஜ. கூட்டணியை விட்டே வெளியேறினார். அதனால் அண்ணாமலையை ஏற்காத எடப்பாடி விஜய்யை எப்படி ஏற்பார்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தவெக உடன் அதிமுக கூட்டணி அமைக்க தொண்டர்கள் விரும்பினாலும் அதிமுக – தவெக இணைவதில் சிக்கல் உள்ளது. தவெக முதல் மாநாட்டில், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் சம பங்கு என்று அறிவித்திருந்தார் விஜய். அதனால் அவர் பிற கட்சியில் கூட்டணியில் இணைந்தாலும் முதல்வர் வேட்பாளர் கனவில்தான் செல்வார்.
நிலைமை இப்படி இருக்கும்போது, ‘’விஜய்யை முதல்வராக ஏற்கமாட்டார். அதே நேரம் ஒரு உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வாக்க விஜய் கட்சி தொடங்கவில்லை’’ என்கிறார்.
ஒருவேளை முதல்வர் – துணை முதல்வர் என்கிற பகிர்வு மனநிலையில் அதிகமுக உள்ளதா? என்றால் அதிமுக ஆட்சியில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அதிகார பகிர்வு அளிப்பது பற்றி தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்னர்தான் முடிவு செய்யும் என்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன்.