அரசியல் பிரவேசம் பற்றி ரஜினிகாந்த் அறிவித்தபோது ’’தமிழர் அல்லாதவர் ஆட்சிக்கட்டிலுக்கு ஆசைப்படுவதா?’’ என்று நாம் தழிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமயாக எதிர்த்தார். துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
ரஜினியைப் பார்த்த்து பார்த்து வளர்ந்த விஜய் ஒரு கட்டத்தில் தன் மார்க்கெட் உச்சத்திற்கு வந்ததும், ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார ஆசைப்பட்டார். இதனால் காக்கா -கழுகு என்று இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ரசிகர்களும் வலைத்தளங்களில் வாய்த்தகராறு செய்துகொண்டிருக்கிறார்கள்.
விஜய் தன்னுடன் கூட்டணி சேர்வார் என்றிருந்த சீமானுக்கு, திராவிடமும் தமிழ்தேசியமும் என் இரு கண் என்று சொல்லிவிட்டதால், விஜய்யுடன் கொள்கை ரீதியாக முரண் ஏற்பட்ட நிலையில், விஜய் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார் சிமான்.
இந்த நிலையில் , நேற்று இரவு போயஸ்கார்டன் சென்ற சீமான், ரஜினியை சந்தித்து 20 நிமிடங்களுக்கு மேல் பேசி இருக்கிறார். இந்த சந்திப்பில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி உடனிருந்தார்.
எதற்காக சீமான் ரஜினியை சந்தித்தார்? என்ன பேசினார்? என்பது குறித்து தகவல் பரவி வந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து சீமானே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள விளக்கத்தில், ‘’சினிமா, அரசியல் இரண்டும் குறித்து ரஜினியிடம் பேசினேன். அவரிடம் நிறைய பேசினேன். அதை எல்லாம் என்னால் வெளியே சொல்ல முடியது. அவரும் அரசியல் குறித்து
அரசியல் எவ்வளவு ஆபத்தான விளையாட்டு என்று கமலிடம் சொன்னது மாதிரியே ரஜினியிடமும் சொன்னேன். ஏச்சு, பேச்சுக்கள், அவதூறுகளை சந்திக்க வேண்டியது வரும். அதெல்லாம் அவருக்கு சரிப்படாது. இதை ரஜினியிடமே சொன்னேன். சிஷ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்லி இருந்தார். அதுகுறித்தும் அவரிடம் பேசினேன். சிஷ்டம் சரியில்லை என்று அவர் சொன்னதை நான் அமைப்பு சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று முடிவெடுத்த பின்னர் அந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தரும்படியும், திமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுக்கும்படியும் ரவீந்திரன் துரைசாமி கேட்டுள்ளார். அதற்கு ரஜினி சம்மதிக்கவில்லை. நடுநிலயாளன் என்று என்னை இத்தனை நாளும் விமர்சித்துவிட்டு இப்போது ஒரு கட்சிக்கு ஆதரவு என்று கேட்டு வருகிறீர்களே? இது சரியா இருக்குமா? என்று அனுப்பி இருக்கிறார் ரஜினி. அடுத்து நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவளித்து அவருக்கு ஓட்டு போடுமாறு ரஜினி அறிக்கை விடுவார், வாய்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்து ரஜினியிடம் கேட்டிருந்தார் ரவீந்திரன் துரைசாமி. ‘’நான் அரசியலை விட்டு விலகிவிட்டேன். என்னை மீண்டும் அதற்குள் இழுக்காதீங்க ரவி’’ என்று சொல்லிவிட்டார் ரஜினி.
இந்நிலையில் மீண்டும் ரவீந்திரன் துரைசாமி ரஜினியிடன் சந்தித்தால் பாஜகவு விவகாரமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ரஜினி பாஜக ஆதரவாளர் என்ற கருத்து இருக்கிறது. நாதகவும் பாஜகவின் பி டீம் என்ற கருத்து இருக்கிறது. இந்நிலையில் இருவரும் சந்தித்ததால், சீமான் பாஜவுடன் கூட்டணி அமைக்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது குறித்த கேள்விக்கு, ‘’சங்கி என்பதற்கு நண்பன் என்று அர்த்தம்’’ என்று சொல்லிவிட்டு சிரித்த சீமான், ‘’விமர்சனங்களை தாங்காதவன் விரும்பியதை பெற முடியாது. அவதூறுகளை தாங்காதவன் அற்ப வெற்றியை கூட தொட முடியாது’’ என்று பதிலளித்திருக்கிறார்.
ரஜினி – சீமான் சந்திப்பில் நடந்தது என்ன? பாஜகவுடன் கூட்டணிக்கான மூவ்’ஆ? என்பது குறித்து இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் கள நிலவரம் சொல்லும் எதிர்பார்க்கலாம்.