வங்கதேசத்தில் நிலவி வரும் உள்நாட்டுக் கலவரங்கள் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா இராணுவ ரீதியாக தலையிட்டு மோதலைத் தீர்க்க உதவியது போலல்லாமல், வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய தொடர் அமைதியின்மையை கவனமாகக் கையாளப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
1971-ல் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசமும், 2024-ல் இருக்கும் வங்கதேசமும் முற்றிலும் வேறுபட்டவை. 1971 ஆம் ஆண்டில், ஜெனரல் யஹ்யா கானின் வங்க மொழி மக்களுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் விடுதலை போராட்ட முன்னெடுப்புகள் காரணமாக, வங்க மக்களின் ஆதரவை பெற்றிருந்தது இந்தியா.
தற்போது எல்லையின் இருபுறமும் உணர்ச்சிகளும் ஆதரவுக் குரல்களும் அதிகமாக இருந்தாலும், இந்திய அரசின் எந்தவொரு நடவடிக்கையும் வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான பரந்த வெகுஜன எதிர்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் மதவாத அடக்குமுறைகள் போலவே, வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்து வருகிறது.
ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு கவிழ்ந்தது முதல், இந்துக்கள் மீதும் அவர்களின் வணிக இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை கண்டித்து போராடி வரும் இந்து சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
24×7 attack on Hindus & Hindu places of worship in #Bangladesh. When will it all STOP? @TulsiGabbard @realDonaldTrump @narendramodi pic.twitter.com/8fSsx2N1Ny
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 27, 2024
வங்கதேசத்தில் இந்திய ஆதரவு ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததற்கு அமெரிக்காவின் சதி இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்களால் குற்றம் சட்டப்படுகிறது. அந்நாட்டில் நடந்த மாணவர்களின் போராட்டம் இந்திய எதிர்ப்பு BNP கட்சியால் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுஸ் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், இந்துக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்த ISKCON தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வங்கதேச அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சின்மோய் கிருஷ்ண தாஸின் கைதை கண்டித்து வங்கதேசத்தில் டாக்கா, சட்டோகிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
बांग्लादेश में इस्कॉन टेंपल के संत की गिरफ्तारी और अल्पसंख्यक हिंदुओं के खिलाफ लगातार हो रही हिंसा की खबरें अत्यंत चिंताजनक हैं।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 27, 2024
मेरी केंद्र सरकार से अपील है कि इस मामले में हस्तक्षेप किया जाए और बांग्लादेश सरकार के समक्ष अल्पसंख्यकों की सुरक्षा सुनिश्चित करने का मुद्दा मजबूती… https://t.co/Cuu0dBO3nr
இந்திய வெளியுறவுத் துறையும் கிருஷ்ண தாஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன.
இந்த நேரத்தில், இந்தியாவின் நேரடி தலையீடுகள் வங்கதேசத்தில் உள்ள இந்து சமூகத்தின் மீது எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் துல்லியமாகவும் மறைவாகவும் இருக்க வேண்டும்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசுக்கு எதிராக விரைவாகச் செயல்படவும், வெளிப்படையாக நிகழ்ந்து வரும் வன்முறைகளில் இருந்து இந்து சமூகத்தைக் காப்பாற்றவும் தற்போது நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல்களில் இருந்து இந்து சிறுபான்மையினர் மக்களை பாதுகாக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது.
சில சமயங்களில் ஒரு மோதலில் சிக்கிக் கொள்வதை விட, உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றாமல் இருப்பது நல்லது.
நமது இந்திய அரசாங்கம் உள்நாட்டில் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன. நமது பொருளாதாரத்தை மேம்படுத்துவது முதல் சமூக குறியீடுகளை மேம்படுத்துவது வரை, இந்திய அரசாங்கம் கவனிக்க வேண்டி பல விவகாரங்கள் உள்ளன.
நமது நாடு ஒரு தேவையில்லாத மோதலுக்கு இழுக்கப்படுவதைத் தடுக்க பிரதமர் மோடி உட்பட உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள் கவனமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதேபோன்ற ஒரு சூழல், நமது இந்திய துணைக்கண்டத்தில் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது. கடந்த 1979-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில், சோவியத் சார்பு ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா தீட்டிய சதி திட்டத்தால் ஒரு முடிவில்லாத போரில் சிக்கியது சோவியத் ரஷ்யா. இது தான், சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு தொடக்கக் காரணம் என்றும் நம்பப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு லடாக் பிராந்தியத்தில் நிலவி வந்த பதற்றம் தற்போது தணிந்துள்ள நிலையில், மற்றொரு பிராந்திய மோதலில் சிக்கிக்கொள்ள இந்தியாவுக்கு இது சரியான தருணம் அல்ல.
நமது நாட்டின் சில எதிரிகள் நாம் வளர்ச்சியடைய விரும்பவில்லை என்பதையும், நமது வளங்களையும் பொருளாதாரத்தையும் முடிவில்லாத மோதல்களின் குழிக்குள் நாம் இழுக்கப்படுவதையும் விரும்புகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வங்கதேச அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் உள்ளன; அவர்களின் நீர் மற்றும் மின்சார விநியோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
வங்கதேசத்தின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுவதற்கு பதிலாக, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு ஆதரவான குரல் எழுப்புவதை உறுதி செய்ய வேண்டும்; இதற்கு மாறாக இருநாடுகள் இடையேயான நட்புறவுகளை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபடாமல் இருப்பது நல்லது.
வங்கதேச பிரச்சனைகளில் தலையிட்டு சிக்கிக் கொள்வதை விட, மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இங்குள்ள சிறுபான்மையினரை பாதுகாப்பதுமே இந்தியாவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
‘The views expressed in this article are solely those of the author’