போலியான நண்பர்கள் உங்கள் வாழ்வில் ஆர்வமின்மையை கூட தூண்டிவிடுவார்கள்; உண்மையான நண்பர்கள் உண்மையான ஆதரவை வழங்கி உங்களின் வெற்றிகளைக் கொண்டாடுவார்கள். இந்த அறிகுறிகளை அங்கீகரிக்க வேண்டியது நமது சுதந்திரமான வாழ்வியலுக்கு மிக அவசியம்.
தவறான நபர்களுடன் பழகுவதை விட தனியாக இருப்பது நல்லது
பலர் நமது நலம் விரும்பிகளாகத் தோன்றினாலும், உண்மையில் அப்படி இருப்பதில்லை. இது நமது ‘நண்பர்கள்’ போல் நடிக்கும் நபர்களுக்கும் பொருந்தும். அவர்களை உண்மையான நண்பர்களாக கருதும் நாம், நமக்கு நல்லது நடக்கவே அவர்கள் விரும்புவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் திடீரென நம்மை விட்டு விலகி சென்றுவிடுவார்கள். இது நமக்கு இறுதியில் நம்பிக்கையின்மைக்கு மட்டுமே வழிவகுக்கிறது.
எனவே, ஒருவரை நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் தீர்மானிப்பதற்கும், உளவியலாளர் ஜியாத் ரூமி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 5 மறைமுக அறிகுறிகளை பகிர்ந்துள்ளார்.
1.உள்ளுணர்வைப் பின்பற்றுங்கள்
போலியான நண்பர்களோடு நாம் பேசும்போதோ அல்லது நேரத்தை செலவிடும்போதோ உங்களை உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையச் செய்யலாம், இது ஒரு முக்கியமான அறிகுறியாகும். ஒருவருடன் நேரம் செலவிடம்போது அசௌகரியம் ஏற்பட்டால், இயல்பாகவே உடலும் நரம்பு மண்டலமும் ஆழ்மனதில் உங்களுக்கு அறிகுறிகளைத் தருகிறது. எனவே, உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு அதைப் பின்பற்றுங்கள்.
2. உண்மையான நண்பர்கள் அக்கறை காட்டுவார்கள்
உங்களின் ஆர்வமுள்ள ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சிலரிடம் பகிரும்போதெல்லாம், அவர்கள் உங்கள் பேச்சை கவனமாகக் கேட்க மாட்டார்கள் என்பதை நீங்கள் அடிக்கடி கவனித்திருக்கிறீர்களா? அது உங்களைப் பற்றி கவலைப்படாத நபர்களின் உன்னதமான அறிகுறியாகும்.
ஒரு உண்மையான நண்பர் உங்கள் ஆர்வங்கள் (Passions) மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள அக்கறை காட்டுவார்கள்.
3. பொறாமை கிண்டலாக வெளிப்படும்
உங்கள் வெற்றிக்காக உண்மையிலேயே மகிழ்ச்சியாக வெளிப்படுத்துவதற்கு போலி நண்பர்களால் முடியாது. அவர்கள் தங்களின் அதிருப்திகளை கிண்டலான நகைச்சுவைகள் அல்லது கருத்துக்கள் மூலம் மறைத்து வெளிக்காட்டுவார்கள். அதை நீங்கள் மேலோட்டாமாக பார்த்தால் அப்பாவித்தனம் போல தோன்றலாம், ஆனால், அவர்கள் உங்கள் மகிழ்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள் என்பதை அது தெளிவாகக் குறிக்கிறது.
4. போலியான நபர்கள் நம்மை தாழ்த்துவார்கள்
ஒருவரின் விமர்சனம் உங்களை அடிக்கடி தாழ்த்துவதாகவோ அல்லது அது உங்களை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், அவர்களே போலி நண்பர்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக, உண்மையான நண்பர்கள் உங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டி உங்களை சிறந்த மனிதராகவும், வளரவும் உதவும் வகையில் அமையும். அவர்கள் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் உண்மையான ஆர்வத்துடன் கருத்துக்களை தெரிவிப்பார்கள். இது உங்களால் உணரக்கூடிய ஒன்றாகும்.
5. உரையாடல்களில் ஆதிக்கம்
உங்களின் சாதனைகளைக் கொண்டாடுவது அல்லது உங்கள் சவால்களைப் பற்றி விவாதிப்பது போன்ற உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய தருணங்களில் கூட, போலி நண்பர்கள் பெரும்பாலும் அவர்கள் மீதே கவனத்தைத் திசைதிருப்பி உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த நடத்தை ஒரு அடிப்படை பொறாமை எண்ணத்திலிருந்து உருவாகலாம். உங்களை உண்மையாக ஆதரிப்பதற்குப் பதிலாக, அவர்கள் உங்களை ஒரு போட்டியாக பார்ப்பார்கள்.
எனவே, உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள், ஏனெனில் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். தவறான நபர்களுடன் பழகுவதை விட தனியாக இருப்பது நல்லது.