இந்தியாவிலும் பிற நாடுகளிலும் லஞ்சம் கொடுத்த சில அமெரிக்க நிறுவனங்கள் ஆதாரங்களுடன் சிக்கிக் கொண்டன. அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் உத்தரவின்படி, அமெரிக்க கருவூலத்திற்கு லஞ்சம் கொடுத்த தொகையை விட 300 சதவீதத்துக்கும் மேல் அபராதம் செலுத்தி புகாரில் சிக்கிய நிறுவனங்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பியுள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) நிறுவன அதிகாரிகளுக்கு சுமார் 4.2 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்த புகாரில் அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனமான Moog Inc நிறுவனமும் சிக்கியுள்ளது.
அமெரிக்க செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் படி, Moog Inc நிறுவனம் 2020-2022-க்கு இடையில் தனது இந்திய கிளை நிறுவனமான MMCPL மூலம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019-ல் இந்திய ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துருக்கியிலும் சுமார் 57 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்த புகாரில் சிக்கிய அமெரிக்காவின் கணினி தொழில்நுட்ப நிறுவனமான Oracle, சுமார் ரூ.195 கோடி அபராதம் செலுத்தி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பியுள்ளன.
அமெரிக்காவின் பிரபல இரசாயனங்கள் உற்பத்தி நிறுவனமான Albemarle, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அதிகாரிகளுக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் பெற்று, 2009 மற்றும் 2011 ஆண்டுகளுக்கு இடையில் ரூ.94 கோடி லாபம் ஈட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் சுத்திகரிப்பு நிறுவனத்துடன் இணைந்து Albemarle நிறுவனம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.