கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியை பிரிவதாக முறைப்படி அறிவித்து சென்னை குடும்பல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுவும் தாக்கல் செய்தார்.
கடந்த 2009ம் ஆண்டில் காதலித்து திருமனம் செய்து கொண்டு, 15 வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையை உதறிவிட எண்ணமில்லை என்றே தெரிவித்திருந்தார் ஆர்த்த். ரவியின் இந்த முடிவு தனக்கும் தன் மகன்களுக்குக் அதிர்ச்சியை அளிக்கிறது என்றே தெரிவித்திருந்தார்.
ஜெயம்ரவி விவாகரத்து முடிவில் இருந்தாலும், ஆர்த்தி அந்த முடிவில் இல்லாமல் இருந்து வந்தார்.
இதனால், குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் சமரச மையத்தில் இருவரும் நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தும் படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் ஆஜர் ஆனார்கள். நீதிபதி நியமித்த மத்தியஸ்தர் முன்பு இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மனம் விட்டு பேசினர்.
இருவரின் பேச்சு வார்த்தைகளையும் மத்தியஸ்தர் குறிப்பெடுத்துக்கொண்டார். வழக்கின் மறு விசாரணை ஜனவரி மாதம் 18ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி தேன்மொழி.
அன்றைய தினம், சமசர தீர்வு மையத்தில் நடந்த பேச்சுவார்த்தையை அறிக்கையாக நீதிபதியிடம் தாக்கல் செய்வார் மத்தியஸ்தர். அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு அமைய உள்ளது.