நடிகர் விஜய்க்கு வேலை செய்வதற்காக மத்திய அரசு சம்பளம் வழங்குவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. மத்திய அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட ஆயத்தமாகி வருகின்றனர் சக ஊழியர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண்ராஜ் IRS செயல்பட்டு வருகிறார். மத்திய அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு விஜய்க்கு வேலை செய்கிறார் அவர். அரசாங்க வேலை பார்க்கும் நபர், தனி ஒருவருக்காக அரசியல் கட்சி தலைவருக்காக வேலை செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர் அருண்ராஜ் துறை சம்பந்தப்பட்ட ஊழியர்கள்.
தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய்யின் ஆலோசகர்களாக இருவர் இருப்பதாக தகவல். அதில், ஒருவர் ஜான் ஆரோக்கியசாமி. கடந்த 2016இல் ’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்று பாமகவிற்கு வேலை செய்தவர். இவர்தான் விஜய்க்கு வேலை செய்கிறார் என்பது தவெக தொண்டர்களுக்கு இது பெரும்பாலும் தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் வேலை செய்கிறார் என்பது தெரியும்.
இந்த ஜான் ஆரோக்கியசாமியை அழைத்து வந்தவர் தற்போது மத்திய அரசு பணியில் வருமான வரித்துறையில் துணை ஆணையராக இருக்கும் அருண்ராஜ் IRS தான்.
மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர், ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தை எடுக்க வைத்ததும் இந்த அருண்ராஜ் IRS என்ற அதிர்ச்சியான தகவலும் ககிசின்றன. விஜய்க்காக அவர் பணி செய்வது மத்திய அரசிற்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடிகர் விஜய்க்கு நன்கு பரிட்சயமான இவரை அணுகித் தான் ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசராக நியமிக்கப்பட்டு சுமார் 11 கோடி ரூபாய் வரை வாங்கி இருக்கிறார் என்றும் தகவல்கள் கசிகின்றன.
விஜய் களத்திற்கு வராமல் ’பனையூர் அரசியல்’ செய்வதற்கு மிக முக்கியமான காரணமானவர்கள் இந்த இருவர்தான் என்று தவெக நிர்வாகிகளே புலம்புகின்றனர்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததற்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் காரணம் என்று சொல்கிறது பனையூட் வட்டாரம்.
தவெகவில் இதுவரை நிர்வாகிகள் நியமிக்காதது, கட்டமைப்பை பலப்படுத்தாதது, வெளியில் இருந்து பல்வேறு கட்சியில் இருந்து இணைய காத்திருக்கும் பலரை அவமானப்படுத்துவது என தொடர்ச்சியாக விஜய்யை வறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று இவர்கள் இருவரும் அவரை வீழ்த்தி விடுவார்கள் என்றே பனையூர் தவெக வட்டாரம் வேதனை தெரிவிக்கின்றது.
yzs4hg
m0sk7x