ரெட்மி நிறுவனத்தின் சமீபத்திய மாடலான Redmi 14C ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் அறிமுகமானது. திங்களன்று (ஜன.6) இந்தியாவில் அறிமுகமான இந்த பட்ஜெட் விலை 5G ஸ்மார்ட்ஃபோன், 6GB வரையிலான LPDDR4X RAM மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட அசத்தலான இன்டர்னல்களை கொண்டுள்ளது.
Performance: Redmi 14C ஸ்மார்ட்ஃபோனில் 4nm-அடிப்படையிலான Qualcomm Snapdragon 4 Gen 2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது; இது என்ட்ரி லெவல் பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட் ஃபோன்களில் மிகவும் திறமையான சிப்செட்களில் ஒன்றாகும். 6GB LPDDR4X RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வரை, இந்த ஃபோனை பெறலாம்.
Battery: இந்த ஃபோன் 18W பாஸ்ட் சார்ஜிங் திறனுடன் 5160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது; இருப்பினும், 33W பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட சார்ஜர் பாக்ஸில் கொடுக்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 மணிநேர வீடியோ பிளேபேக், 33 மணிநேர சமூக ஊடக பயன்பாடு மற்றும் 42 மணிநேர குரல் அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியும் என்று Redmi கூறுகிறது.
Camera: இந்த போனில் 50MP பிரதான பின்புற கேமராவுடன் இரண்டாம் நிலை ஷூட்டருடன் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வட்ட வடிவிலான சிறந்த டிசைன்களுடன் கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் 50MP படங்களைப் பிடிக்கும்போது Night Mode மற்றும் Portrait Mode போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தலாம்.
கூடுதலாக, V250, Case E64 மற்றும் Cinematic உள்ளிட்ட ஃபில்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. செல்ஃபிக்களுக்கு, Portrait மற்றும் Beautify மோடுகளுக்கான ஆதரவுடன் 8MP கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
Durability: Redmi 14C ஸ்மார்ட் ஃபோன் ஆனது IP52 மதிப்பீட்டுடன் வருகிறது, அதாவது ஃபோன் சிறந்த பாதுக்காப்பு அம்சங்களை கொண்டு வருகிறது.
Design: Stardust Purple, Starlight Blue மற்றும் Stargaze Black உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களில் Redmi 14C 5G கிடைக்கிறது.
Price: Redmi 14C 4GB + 64GB மாடல் 9,999 ரூபாயில் கிடைக்கும்; 4GB + 128GB மாடல் ரூ.10,999 விலையிலும் மற்றும் 6GB + 128GB மாடல் ரூ.11,999 விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 10 முதல் கிடைக்கும்.