
தவெக மாவட்ட செயலாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட பலரும் பெரிய அளவில் பலம் பொருந்தியவர்களோ, செல்வாக்கு பெற்றவர்களோ இல்லாமல் இருப்பது திமுக, அதிமுகவுக்கு தரப்பில் தெம்பை கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.
பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கிய சாமியின் உத்தரவின் பெயரிலே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர்கள் திமுக, அதிமுக போன்ற பெரிய தலைவர்கள் மாவட்ட தலைவர்களுடன் களம் காண்பார்கள் என்பது சந்தேகம் என்கிறார்கள்.
மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்ட அனைவருமே விஜய் மக்கள் இயக்க ரசிகர்களே தவிர பெரிதும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களோ அரசியல் அனுபவம் உள்ளவர்களோ கிடையாது. மேலும் இந்த மாவட்ட செயலாளர் பட்டியலை பார்க்கும் பொழுது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த தவெக மீதான அந்த எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் இரண்டு மாதம் கூட பொருளாதார ரீதியில் கட்சியை நடத்துவார்களா? அல்லது கட்சி எவ்வாறு செயல்பட போகிறது என்கின்ற ஐயம் விஜய்யின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள பலரும் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மை சமுதாயங்களாக கருதப்படும் பல சமுதாயங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பல சமுதாயங்களை மாவட்ட செயலாளர் பட்டியலில் பெரிதாக இடம்பெறவில்லை .
இது அந்த அப்பகுதியில் உள்ள சமூகங்கள் மத்தியில் சற்று கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது . இந்த நிர்வாகிகளை வைத்து திமுக, அதிமுகவுக்கு நிகராக அரசியல் செய்வது என்பது கேள்விக்குறி என்பதால் தனித்துப் போட்டியிடுவாரா விஜய் அல்லது கூட்டணிக்கு முயற்சிப்பாரா விஜய் என்கின்ற கேள்வி அதிகம் எழந்துள்ளது.
234 தொகுதிகளிலும் வேட்பாளர் போடுவதில் கடும் சிக்கல் ஏற்படும். வேட்பாளரை போட்டு பணம் செலவழிப்பதற்கு யாரும் தற்போது ஆர்வமாக இல்லை . வேட்பாளர் கிடைக்காத பட்சத்தில் இறுதி நேரத்தில் விஜய் மிகவும் சிரமப்படுவார் என்கின்ற கருத்தும் தற்போது தவெக வட்டாரத்தில் நிகழ்கிறது.