
seeman
நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ளவதாகச் சொல்லி பலமுறை உறவு வைத்துக்கொண்டு 6 முறை கருக்கலைக்கச் சொல்லி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இதில் சென்னை உயர்நீதிமன்றம், பாலியல் வழக்கு என்பதால் இதை தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்னது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்றும் சொன்ன உயர்நீதிமன்றம், வழக்கில் விசாரணை முடித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் சீமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.
’’12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வழக்கு கொடுத்துள்ளார் விஜயலட்சுமி. இதற்கு முன்னர் 3 முறை வழக்கை திரும்ப பெற்றுளார்.
புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காரணமாக இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது’’ என்று சீமான் தரப்பு வாதிட்டது.
ஆனாலும் நீதிபதிகள், ‘’விஜயலட்சுமி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவே வழக்கு தொடர்ந்து நடக்கட்டும்’’ என்றனர்.

அதே நேரம், ’’12 வாரங்களில் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அறிக்கை தாக்கல் வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம்’’ என்றனர்.
இந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்குவது , சுமூக உடன்பாடு எட்ட முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், எதிர்மனுதாரர் பதிலளிக்கவும் என்றும் உத்தரவிட்டனர்.
வழக்கின் மறு விசாரணையை மே இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
djRaUcW vkk CHvZWJB GHlKcw OpP oWby klg
Your writing held my attention from beginning to end.