
பிரபல பின்னணிப்பாடகி கல்பனாவை ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து மயங்கிக் கிடந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அவர் உடல்நலம் தேறி இருக்கிறார்.
கணவர் மீதான பிரச்சனையால் தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டு கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்திகள் வதந்தி என்று கல்பனா மறுத்தார்.
அன்று என்னதான் நடந்தது?
‘’மனசுல இருக்குற வேதனையை சொல்லணும். உண்மையா நடகுற பிரச்சனை என்ன? இதெல்லாம் சொல்லணும்னுதான் பிரஸ்சை கூட்டி இருக்குறேன்.
நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணல. எனக்கும் என் கணவருக்கும் பயங்கர பிரச்சை எல்லாம் இல்ல. மார்ச் 4ம் தேதி காலையில 11 மணிக்குத்தான் கொச்சின்ல இருந்து நான் ஹைதராபாத்துக்கு பிளைட்ல வந்தேன்.

நான் எல்.எல்.பி. ஸ்டூடண்ட். இந்த வயசுல ’லா’ படிச்சுட்டு இருக்குறேன். 5வது செமஸ்டருக்காக அதிக ரிஸ்க் எடுத்து படிச்சதால ஜனவரி மாசத்துல இருந்தே எனக்கு உடல்நிலை பாதிப்பு இருந்திருக்கு. லங்ஸ்ல பிராபளம் இருந்திருக்கு. ஒன்றரை மாசமாக இருமல் இருக்கு. அதோடதான் நாலஞ்சு ஷோ பாடி முடிச்சேன். ரொம்ப சிரமப்பட்டு போராடி கஷ்டப்பட்டுத்தான் பாடிட்டு வந்தேன்.
என் வாழ்க்கையில நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் இந்த மாதிரியான மனுசன் எனக்கு புருசனாக கிடைச்சதுதான். 45 வயசுல கணவரோட சப்ரோட் இல்லாம எப்படி பாடிட்டு, படிச்சுட்டு, குடும்பத்தையும் பார்க்க முடியும்?அதனால கணவரோட பயங்கர பிரச்சனைன்னு திரிச்சு பேசுறாங்க.
என் அப்பா உயிரோட இல்ல. என் குருமார்களும் உயிரோட இல்ல. அத்தன பேரையும் சேர்த்து வச்ச நடமாடும் தெய்வமா என் வீட்டுக்காருதான் இருக்குறாரு. நான் ரொம்ப லக்கி.
என் பொண்ணுக்கு 19 வயசு முடிஞ்சிடுச்சு. என் பொண்ணுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. அதனால மாத்திரை எல்லாம் சாப்பிடல. என் பொண்ணு விளக்கிச்சொன்னதையும் திரிச்சு போட்டிருக்காங்க.
ஏகப்பட்ட மெண்டல் பிரசர் இருந்ததால அன்னைக்கு நான் அதிகம் சிலிப்பிங் மாத்திரைகள் எடுத்துக்கிட்டேன். இதனால மயங்கி விழுந்துட்டேன்.

அப்போது என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணினேன். நான் மயங்கி விழுந்தத அவர் போன்ல பார்த்துட்டே இருந்தாரு. அவருதான் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் போன் பண்ணி என்னைய ஆஸ்பிடல்ல சேர்க்கச் சொன்னாரு.
40 வருசமா நான் பாடிட்டு இருக்கேன். சென்னையில பிறந்து வளர்ந்த பொண்ணு. ஆனா என்னைய பத்தி வந்த செய்தி எல்லாம் மொத்தமும் தப்பா இருக்குது.
என் பெட்ரூம்ல நடக்குறது உங்களுக்கு தெரியாது; இதுதான் பச்சையான உண்மை. நான் எப்டி படுத்திருந்தேன். என் டிரெஸ் எப்டி விலகி இருந்துச்சுன்னு எல்லாம் பரப்புறாங்க. என் குடும்பத்துக்கு எப்டி வலிச்சிருக்கும்.
உசுரு போகுற நிலைமையில இருந்த அந்த நேரத்துல பெட்சீட்டை விலக்கிவிட்டு என் முகத்தை போட்டோ எடுத்தாங்க. இது நியாயமா?’’ என்று வேதனையை வெளிப்படுத்தினார்.