
கட்சி விதிகளுக்கு முரணாக தமிழக பாஜகவின் புதிய தலைவரானார் நயினார் நாகேந்திரன்.
தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான விருப்ப மனு தாக்கல் இன்று நடைபெற்றது. கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள ஒருவர்தான் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட முடியும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானதால், இந்த விதியின் படி அண்ணாமலை மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்ய முடியாது என்ற நிலை வந்தது. அவர் கட்சியில் ஐந்து ஆண்டுகள்தான் உறுப்பினராக உள்ளார்.
அதே போன்று நயினார் நாகேந்திரனும் கட்சிக்கு வந்து 7 ஆண்டுகள்தான் ஆகிறது. அதனால் அவரும் மனு தாக்கல் செய்ய முடியாது என்ற பேச்சு எழுந்தது.

இதற்கு முன் கட்சிக்கு வந்து ஓராண்டிலேயே அண்ணாமலைக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதே போன்று இந்த முறை இருக்காது. கட்சி விதிகள் நெருக்கடி இருந்த நிலையில் அந்த விதிகள் தற்போது தளர்த்தப்பட்டிருக்கிறது.
இன்று காலையில் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகம் வந்தபோது வாயிற்படியை தொட்டு வணங்கினார் நயினார் நாகேந்திரன். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் நயினார் நாகேந்திரன் போட்டோ இடம் பெற்றுள்ளது.

இன்றைக்கு கட்சியினர் பலரும் நயினாரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனால் அடுத்த தலைவர் நயினார்தான் என்று முடிவானது.
அதற்கேற்றார்போல் நயினாரும் இன்று பிற்பகல் 2.40 மணிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார். நயினாரை புதிய தலைவராக தேர்ந்தெடுக்க ஆர்.எஸ்.எஸ். பச்சைக்கொடி காட்டியது.
இதை பொறுத்துக்கொள்ளாத அண்ணாமலை ஆதரவாளர்கள், அவரே தலைவராக தொடர வேண்டும் என்று கமலாலயத்தில் முழக்கம் எழுப்பினர்.
நயினாரின் மனுவை அண்ணாமலை உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை செய்தனர். நயினாரை அடுத்து வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுள்ளார்.
நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்து முடித்ததுமே கமலாலயத்தில் இருந்த அண்ணாமலையின் பெயர்ப்பலகை அழிக்கப்பட்டது. அடுத்த தலைவர் பட்டியலில் பலர் இருந்த நிலையில் நயினார் முந்தியது எப்படி? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது கமலாலயத்தில்.
hb2s6y