
திமுக கூட்டணியில் பாமக இருந்த போது தினமும் திமுக அரசை விமர்சித்து வருவார் ராமதாஸ். அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’தைலாபுரம் தோட்டத்தில் இருந்து எனக்கு தைலம் வருகிறது’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கலைஞர்.
அன்புமணிக்கும் தனக்கும் நடக்கும் பிரச்சனை குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதை நினைவு கூர்ந்தார் ராமதாஸ்.
கூட்டணியில் இருந்து கொண்டே அரசை விமர்சித்தாலும் அதை எத்தனை பக்குவமாக கையாண்டார் கலைஞர். நாகரிகமாக, நளினமாக பேசினார் கலைஞர். ஆனால் இப்போது அரசியல் எப்படி எல்லாமோ போய்க்கொண்டிருக்கிறது என்று நொந்துகொண்டார் ராமதாஸ்.

வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜக கூட்டணியிலேயே இருந்து மத்திய அமைச்சர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று அன்புமணி துடித்துக்கொண்டிருக்க, மாநில அரசியல்தான் முக்கியம். வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்குச் செல்ல வேண்டுமென்கிற முடிவில் உள்ளார் ராமதாஸ். இதனால் அப்பா – மகன் இருவரிடையே பிரச்சனை எழுந்து அது கட்சி தலைவர் பதவியை ராமதாஸ் கைப்பற்றும் அளவிற்கு சென்றிருக்கிறது.
திடீரென்று அந்த நாள் ஞாபகம வந்து கலைஞரை புகழ்ந்து பேசிய ராமதாசின் இந்த மனமாற்றத்தைப் பார்க்கும் போது பாமக, திமுகவுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறதா? என்று கேட்கின்றனர் பலரும்.
a64lji