
ரஜினிகாந்தை வைத்து யாரும் துட்டு பார்க்கக்கூடாது தானே பார்த்து விட வேண்டும் என்று பாபா படத்திற்கு பின் மீண்டும் களம் இறங்குகிறார் லதா ரஜினிகாந்த்.
பாபா திரைப்படத்திற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்ததால் அந்தப்படத்தை தொடர்புபடுத்தி பலர் சம்பாதிக்க முயன்றனர். ஆனால் யாரையும் சம்பாதிக்க விடாமல் தடுத்துவிட்டு, பாபா ரஜினி படம் போட்ட டி-சர்ட், டாலர் என்று சகலத்தையும் லதா ரஜினிகாந்தே விற்பனை செய்தார். அந்த படத்திற்கு அதிக கலெக்ஷன் அள்ளும் என்பதால் தியேட்டர்கள் கேண்டீனையும் கூட அவரே எடுத்து நடத்தியதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது ரஜினிகாந்த் -50 நிகழ்ச்சியையும் நடத்துகிறார் லதா. ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்காக , ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த கலைப்புலி தாணு பிரம்மாண்டமாக பாராட்டு விழா எடுக்க முன்வந்தார். இதற்கு ரஜினிகாந்த் அனுமதி கொடுக்கவில்லை.

ரஜினிகாந்த் மன்றத்தினர் பாராட்டு விழா எடுக்க முயன்றபோதும் அதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இப்போது லதாவே இந்த விழாவை எடுக்க முன் வந்திருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் முதலில் அழைப்பு விடுத்திருக்கிறாராம் லதா. அவர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தகவல்.
விழா ஏற்பாடுகள் குறித்து கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்காந்துக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டத்தினையும் நடத்தி இருக்கிறார் லதா.
Awesome https://is.gd/tpjNyL