
ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர்தான் தமிழ் சினிமாவின் உச்ச வியாபார நடிகர்கள். இதில் விஜய் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போடுவதால் திரையங்க உரிமையாளர்களுக்கு கடும் அதிருப்தி.
சினிமா வேண்டாம் என்று உதறிவிட்டு விஜய் அரசியலுக்கு போவதால் அவரை மீண்டும் சினிமாவுக்கு வாங்க என்று அழைப்பது நியாயமில்லை என்று தெரிந்ததால் திரையரங்க உரிமையாளர்கள் அவராக மீண்டும் சினிமாவுக்கு திரும்ப மாட்டாரா? என்று ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனர்.
இந்த நிலையில் வருடத்திற்கு ஒரு படம்தான் அதுவும் கார் ரேஸ் நேரம் போக மிச்சமிருக்கும் மாதங்களில்தான் சினிமாவில் நடிப்பேன் என்று அஜித் எடுத்த முடிவைக்கேட்டு அதிருந்து போயிருக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

விஜய் இல்லாத நிலையில் வருடத்திற்கு அஜித் இரண்டு படங்கள் கொடுத்தால் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும் என்று அவர்கள் விரும்புகின்றனர். குட்பேட் அக்லி படம் மெகா ஹிட் அடித்துவிட்டதால் ஏக உற்சாகத்தில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் இதே போன்ற வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று அஜித்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் முன் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அவர் அஜித்திடம் விபரத்தைச் சொல்ல, அவரும் சந்திக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். விரைவில் இவர்கள் சந்திப்பு நிகழ இருக்கிறது.
Very good https://is.gd/tpjNyL