
எடப்பாடி பழனிசாமியின் மீதுள்ள அதிருப்தியினால் புதிய அதிமுகவை உருவாக்குவது என்று முடிவாகி இருக்கிறது.
ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று அதிமுகவினர் பல்வேறு விதமாக எடப்பாடி பழனிசாமிக்கு புரியவைத்து விட்டனர். அவருக்குப் புரிந்தாலும் தன் நாற்காலியை பங்கு போட விரும்பாததால் அவர் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு சம்மதிக்கவே இல்லை.
வேலுமணி உள்ளிட்டோர் இலேசாக சலசலப்பை காட்டி வந்தாலும் பெரிதாகவே அலையடித்துப் பார்த்தார் செங்கோட்டையன். கடைசியில் அவரே ‘எடப்பாடியா’ர் வாழ்க’ என்று முழக்கம் எழுப்பும் அளவுக்கு போய்விட்டது நிலைமை.’
இதில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அதனால் இனியும் எடப்பாடியை நம்பி பிரயோசனம் இல்லை என்று கடுப்பாகி, புதிய அதிமுகவை தோற்றுவிப்பது என்று முடிவாகி இருக்கிறது.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்தே புதிய அதிமுகவை உருவாக்கப்போவதாக சொல்லி வருகிறார் கே.சி.பழனிசாமி. இப்போது ‘அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல்..’ என்று அதிமுக தொண்டர் ஒருவர் தனக்கு எழுதியதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ’’ஓபிஎஸ் பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டார். இபிஎஸ்சும் சுயநலத்தால் அதிமுகவை தாரை வார்த்துவிட்டார். எடப்பாடியை திருத்தி வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது இனியும் நடக்காது. இந்த நிலையில் அதிமுகவையும் அதிமுக தொண்டர்களையும் மீட்பதற்கு ஒரே வழி, புதிய அதிமுகவை தோற்றுவிப்பதே’’ என்று இருக்கிறது.

அதில் மேலும், ‘’எம்.ஜி.ஆரின் புகழை மட்டுமே வைத்து தமிழகத்தை காக்கப் போவது கேசிபியின் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’’என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தன்னை மட்டுமே முன்னிறுத்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தூர வீசிவிட்டு எடப்பாடி பழனிசாமி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு ரத்தத்தின் ரத்தங்களிடையே உள்ளது. விவசாயிகள் பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலலிதா படத்தை நிராகரித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் படத்தை பெரிதாகப் போட்டதால்தான் செங்கோட்டையன் கடுப்பாக அலையடித்தார்.

இப்போது இக்கடிதத்தின் சில வரிகளும் கூட, எடப்பாடி பழனிசாமி தன்னை மட்டுமே முன்னிறுத்திச் செல்வதை தொண்டர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
n7i8co