
ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சில ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பதிலுக்குப் பாகிஸ்தான் இராணுவமும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் போர் மூளக் கூடும் என்ற அச்சம் நாடும் முழுவதும் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் பற்றி இரு நாடுகளும் எதுவும் பேசாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. மேலும் பல்வேறு மேடைகளில் ’நான் தான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி போரை நிறுத்தினேன்’ என டிரம்ப் பேசி வந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து வணிகம் ரீதியில் எதுவும் பேசப்படவில்லை எனக் கூறிய பிறகும், தொடர்ந்து அதே கருத்துக்களைப் டிரம்ப் கூறி வந்தார். இதற்கு பாஜக தரப்பில் கண்டனங்களோ, எதிர்ப்போ எதுவும் இல்லை.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கப் பொருட்களுக்கு 0% வரியை இந்தியா ஏற்றுக் கொண்டது, ஆப்பில் நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை என தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை டிரம்ப் பேசி வந்தார்.
இந்நிலையில், இந்தியா மீதான டிரம்பின் ஆதிக்க மனோபாவ பேச்சை விமர்சிக்கும் வகையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கங்கனா ரணாவத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அப்பதிவில்,
”இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
- அவர் (டிரம்ப்) அமெரிக்கப் பிரதமர். ஆனால், உலகில் மிகவும் விரும்பப்படும் தலைவராகப் பிரதமர் மோடி உள்ளார்.
- டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார்.
- டிரம்ப் ‘Alpha Male’-ஆக இருக்கலாம். ஆனால், நமது பிரதமர் ‘Father of Alpha Male’.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா?” எனக் கூறி இருந்தார்.
சில நிமிடங்களிலேயே இப்பதிவு நீக்கப்பட்டு விட்டது. பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தன்னை தொடர்பு கொண்டு ஆப்பில் நிறுவனம், டிரம்ப் குறித்த பதிவை நீக்கக் கோரியதைத் தொடர்ந்து அப்பதிவு நீக்கப்பட்டதாகவும், அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் மீண்டும் ஒரு விளக்கப் பதிவைப் பதிவிட்டார். இந்த பதிவை நீக்கச் சொல்லி எங்கிருந்து அழைப்பு வரப்போகிறதோ என சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
cushgr