
பாகிஸ்தான் மாதிரி இந்தியாவை இந்துஸ்தானான மாற்ற நடக்கும் முயற்சி குறித்தும், வாரணாசியை இந்தியாவின் தலைநகரமாக மாற்ற நடக்கும் முயற்சி குறித்தும், ஆர்.எஸ்.எஸ்.சின் 100 ஆண்டு கனவு திட்டம் குறித்தும், அந்த கனவு திட்டத்திற்காக 13 ஆயிரம் திருமணம் செய்து கொள்ளாமல் போராடி வருவது குறித்தும் விரிவாக எடுத்துச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
இந்து மதத்தை ஏன் அரசமதமாக மாற்ற முடியவில்லை என்பது குறித்தும், அரசமதமாக மாற்ற நடக்கும் முயற்சி குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் திருமாவளவன்.
வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்தும், நாடு முழுவதும் மதச்சார்பின்மையைக் காத்திட வலியுறுத்தி திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து திருச்சியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசியபோது மேற்கண்டவை குறித்து திருமாவளவன் எடுத்துச்சொன்னார்.
திருச்சி செயற்குழுவில் திருமாவளவன் பேசியது: ‘மதச்சார்பின்மை’ என்கிற ஒரு வார்த்தையை வைத்து ஒருநாளைக்கு ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என்று 10 நாள் தொடர்ந்து 10 கூட்டத்தை நடத்த முடியும். மதச்சார்பின்மை என்கிற வார்த்தைக்குப் பின்னால் அவ்வளவு பெரிய அரசியல் இருக்குது.
ஏன் ஒரு அரசாங்கம் மதச்சார்பின்மையை பின்பற்றணும்? அந்த காலத்தில் ஏன் இந்து மதத்தை அரசமதமாக அறிவிக்கவில்லை? இங்கு பெரும்பான்மை மதமாக இந்து இருந்தும் அந்த மதத்தை ஏன் அறிவிக்கல்லை?

இந்தியா முழுவதும் 90 இலட்சம் பவுத்தர்கள்தான் உள்ளனர். அதனால் அம்மதத்தை அறிவிக்க முடியாது. பார்சி மதத்தில் 10 லட்சம் பேர் கூட இருக்கமாட்டாங்க. அதனால அவுங்களையும் அறிவிக்க முடியாது. சீக்கிய மதத்தை அறிவிக்க முடியாது. அவுங்க சில லட்சம்தான் இருப்பாங்க. சவுதிய அரேபியாவில் தோன்றிய மதம் என்பதால் இஸ்லாத்தை அறிவிக்க முடியாது. பவுத்தம் இங்கே உருவான மதம். ஆனால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
இங்கு இருக்கும் ஒரே பெரும்பான்மை மதம் இந்து மதம் தான். ஆனால் அந்த மதத்தை அரச மதமாக அறிவிக்க முடியாது. ஏன்?
உலகத்தில் எல்லா மதங்களும் சகோதரத்து வத்தையும், சமத்துவத்தையும்தான் போதிக்கின்றன. நபிகள் நாயகமும், இயேசுவும் சகோதரத்துவத்தை தான் போதிக்கிறார்கள்.
மனித குலம் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளக்கூடாது. பலிவாங்கக்கூடாது, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றே மகான்கள் சொன்னார்கள். அவர்களின் போதனைகள் எல்லாம் ஒரு மார்க்கமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் தோன்றிய இந்து மதத்தில், சகோதரத்துவம் மறுக்கப்படுகிறது. அதுதான் இங்கே பிரச்சனை. சமத்துவத்தை மறுக்கிறது இந்து மதம்.
நீயும் நானும் ஒண்ணு கிடையாது. ரெண்டு பேரும் சமம் கிடையாது. பிறப்பால் ஆண் மேலானவன். பெண் கீழானவள். பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த பெண்மணி உள்பட அனைத்து பெண்களும் சூத்திரர்கள்தான். 100 விழுக்காடு பெண்கள் சூத்திரர்கள்தான். அவர்களுக்கு தீட்டு உண்டு. அவர்களுக்கு கல்வி கிடையாது, அதிகாரம் கிடையாது. நிலம் கிடையாது, உரிமை கிடையாது என்று இதை எல்லாம் போதனைகளாக வைத்திருக்கின்ற ஒரு மதம் இந்து மதம். அதனால் இதை அரசமதமாக அறிவித்தால் என்னவாகும் என்கிற கவலைதான் அம்பேத்கருக்கு இருந்தது. அந்தக் கவலை காந்திக்கும் இருந்தது. அந்தக் கவலை நேருவுக்கும் இருந்தது. அதனால் அவர்கள் இந்து மதத்தை அரசமதமாக அறிவிக்கல்லை.

அறிவித்தால் இந்து மதத்தை மட்டுமே அறிவிக்க வேண்டும். வேறு மதத்தை அறிவிக்க முடியாது. இதனால்தான் மதச்சார்பின்மை வந்தது.
நீங்க ஏன் முஸ்லீம் மதத்தை கிண்டல் பண்ண மாட்டேங்குறீங்க, கேலி பண்ண மாட்டேங்குறீங்க? நீங்க ஏன் கிறிஸ்துவ மதத்தை கேலி பண்ண மாட்டேங்குறீங்க? என்று கேட்குறாங்க. அதுக்கு, ‘’நீங்க ஏன் இதற்குள் இருக்கும் பாகுபாட்டை களைய மாட்டேங்குறீங்க? என்று கேட்டால் பதில் இல்லை.
வடகாடு பிரச்சனைக்கு எந்த பிஜேபியினராவது கண்டித்து அறிக்கை வெளியிட்டார்களா? போராட்டம் நடத்தி இருக்கிறார்களா? இதுவரையிலும் எந்த சாதி வெறியாட்டத்தையாவது கண்டித்திருக்கிறார்களா? மேல்பாதி கோயில் பிரச்சனைக்கு நாம் குரல் கொடுக்கிறோம். பிஜேபியினர் இதில் கண்டுகொள்ளவதே இல்லை.
சாதி ஒழியக்கூடாது. பிறப்பின் அடிப்படையில் இருக்கின்ற உயர்வு , தாழ்வு பாதுகாக்கப் பட வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். பார்ப்பனர்கள் எல்லாம் மேலானவர்கள், சத்தியர்கள், வைஷியர்கள், சூத்திரர்கள் எல்லாம் கீழானவர்கள் என்ற சமூக ஒழுங்கில் பஞ்சமர்கள் தனி. நாலு பேரும் ஒண்ணு. பஞ்சமர் தனி ஆளு. சமூக ஒழுங்கில் நாலு பேருக்கு கீழ் 5ஆவது ஆளாக இல்லாமல் எதிரே எதிர்த்து நிற்கும் ஒரு ஆள்தான் தலித்.
தலித்தை அவர்கள் தள்ளி வைக்கவில்லை. உங்களின் கோட்பாடு தவறானது. முட்டாள்தனமான அரசியலை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லி தலித்துதான் அந்த நால்வரிடம் இருந்து தள்ளி நிற்கிறது. ஆனால் இப்போது அவர்கள்தான் தலித்தை தள்ளி வைத்ததாக சொல்கிறார்கள்.
வரலாறு வேறு; புராணம் வேறு. புராணமும் வரலாறும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க கற்பனையானது புராணம். கேட்பதற்கு அது சுவாரஷ்யமாக இருக்கும். மகாபாரதம், ராமாயணம் எல்லாம் கதைதான். ஆயிரக்கணக்கான வருசமா இந்த ரெண்டு இதிகாசமும் மனித குலத்தையே ஆட்டிப்படைக்குது. அதை படைச்சவன் நல்ல கெட்டிக்காரன் தான்.

ராமாயணக்கதையை எல்லாம் கேட்டால் விடிய விடிய தூக்கம் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மகாபாரதக் கதை அதைவிட அருமையாக இருக்கும். ஆனால் இரண்டுமே கதைதான் வரலாறு கிடையாது.
புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது ஏன் வந்தது ? என்பதற்கான வரலாற்றுப் பின்னணியில் இந்து மதம் பாகுபாடு நிறைந்த மதம் என்பதால்தான் இந்து மதத்தை இந்தியாவில் அரச மதமாக அறிவிக்க முடியாமல் போனது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்க்கு உள்ள பெரிய நெருடல். இதனால் இந்தியாவில் இந்து மதத்தை அரசமதமாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு அஜெண்டா உள்ளது. மேலும் பாகிஸ்தான் என்பது போல் இந்துஸ்தான் என்று இந்தியாவை மாற்றம் வேண்டும் என்பதும் அவர்களின் அஜெண்டா உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பறிபோன பங்களாதேஷ், பாகிஸ்தான் எல்லாவற்றையும் சேர்த்து ‘அகண்ட பாரதம்’ உருவாக்க வேண்டும் என்பதுதான் அஜெண்டா. இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் கனவுத்திட்டம். இந்த திட்டத்தை நிறைவேற்ற 100 வருடம் போராடிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். 100 வருசம் இந்த இயக்கம் அதற்காகவே இயங்கி வருகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே 13 ஆயிரம் பேர் கல்யாணம் செய்யாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிசத், பஜ்ரங்தள் எல்லாம் அவர்களின் சங்பரிவார அமைப்புகள். அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 85, 90 வயது ஆனாலும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல், 365 நாளும் இந்த அரசியல் நோக்கத்திற்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார்கள்.
எஸ்.சி., எஸ்.டி. மக்கள் எல்லாம் வேறு மதத்திற்கு போகாதே. உனக்கு என்ன வேண்டும். கோயில் வேண்டுமா கட்டி தருகிறேன், பள்ளி வேண்டுமா கட்டித்தருகிறேன். சாலை, கழிப்பறை வசதி செய்து தருகிறேன் . ஆனால் மதம் மாறாதே! முஸ்லீம் ஆகாதே! கிறிஸ்து ஆகாதே! என்று சொல்லி வருகிறார்கள்.
இதைச் செய்வதற்கு சொத்து சுகம் தேடாமல், பேர், புகழ் தவிர்த்து, குடும்பம் இல்லாமல், திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் உள்ளனர். அந்த 13 ஆயிரம் பேரும் மேடையேற மாட்டார்கள். அதனால் முகம் தெரியாது. போஸ்டரில், துண்டறிக்கையில் தங்கள் பேர் இல்லையென்று கவலைப்பட மாட்டார்கள்.

ஒரு இயக்கத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் 13 ஆயிரம் பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள்தான் இப்படி அர்ப்பணிப்போடு வேலை செய்வார்கள்.
அகண்ட பாரதத்தை உண்டாக்க வேண்டும், அரசாங்கத்தை அரசமதமாக மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இலக்கு. இதை நிறைவேற்றுவதற்காக உருவாக்கிய அரசியல் பிரிவுதான் பிஜேபி. ஆர்.எஸ்.எஸ். தாய்க்கழகம்.
இந்த மத்திய பாஜக அரசின் இலக்கு. அதில் பல பிரிவுகளில் ஒரு அரசியல் பிரிவுதான் பிஜேபி.
இவர்களின் மூன்று கனவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டம்தான். அந்த சட்டம்தான் மதச்சார்பின்மையை சொல்கிறது. இந்த மதச்சார்பின்மையை நீக்குவதுதான் பிஜேபியின் திட்டம்.
இவர்களின் திட்டம் நிறைவேறினால் வாரணாசிதான் தலைநகரமாக இருக்கும். ஆர்.எஸ்.எஸ். கொடிதான் தேசியக்கொடியாக இருக்கும். ’’
This was exactly what I was looking for. Very helpful post!
ZFMrNLo PNNCZYAE wnE YYfkRbn gfPkFKe
hotvxztpxkdgdpqeghoridlkdtdmud