ராமதாசும் அன்புமணியும் பாமகவுக்கு போட்டி போடுவதால் அதிகாரப்பூர்வ பாமக எது? என்று குற்றவியல் நீதிமன்றத்தை நாடச்சொல்லி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கட்சி என்னுடையது. அதனால் நான் குற்றவியல் நீதிமன்றத்தை நாடவேண்டியதில்லை. அன்புமணிதான் நாடவேண்டும் என்கிறார் ராமதாஸ்.
தைலாபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பாமக உள் விவகாரங்கள் குறித்துப் பேசினார் ராமதாஸ்.

’’தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சுவது போல் நான் வளர்த்த கட்சியை அழிக்க நினைக்கிறார் அன்புமணி. ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது பாமக. இதிலேயே கிளை வெட்டி கோடாரி செய்து இந்த ஆலமரத்தையே வெட்ட நினைக்கிறார் அன்புமணி. நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி. கீழே விழுவதைத் தவிர அதன் பலன் வேறு என்னவாக இருக்கும்?
நான் நட்ட பூந்தோட்டத்தில் பல குரங்குகள் நுழைந்து அழித்து வருகிறது. குரங்கு கையில் புமாலை கிடைத்த கைதய் டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் சொன்ன பிறகும் கூட அதை எல்லா மீறி விருப்ப மனு வாங்குவது, கூட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் பரிகசிக்கிற வேலைகளை எல்லாம் அன்புமணி செய்து வருவது தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திராத ஒரு புதுமை.

என் பெயரைச்சொல்லி என் கட்சிப் பெயரைச்சொல்லி அன்புமணி பேசுவதெல்லாம் பொய். அந்த பொய் கூட்டத்திற்கு யாரும் ஆதரவு தர வேண்டாம்.
தவறான புள்ளி விபரங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி இருக்கிறார் அன்புமணி.
அன்புமணிக்கும் பாமகவுக்கும் எந்த உரிமையும் இல்லை. இந்த கட்சியை உருவாக்கியவன் நான் சொல்கிறேன். பம்மாத்து வேலைகளை செய்பவர்களுக்கு எச்சரிக்கிறேன்.. உன் பருப்பு வேகாது. வேண்டாம் தம்பி விபரீத விளையாட்டு’’என்றார் ராமதாஸ்.
