
இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI, 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பயோமெட்ரிக் அப்டேட் (MBU) கட்டணத்தை ரத்து செய்துள்ளது.
இந்த புதிய விதிமுறை அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரு வருடத்திற்கு இது முழுமையாக இலவசம் ஆகும். குழந்தைகளுக்கான ஆதார் கார்டு இன்று ஒரு முக்கியமான ஆவணமாகிவிட்டது. பள்ளி சேர்க்கை, நுழைவுத் தேர்வுகள், ரேஷன் கார்டு சேர்க்கை போன்ற பல சேவைகளுக்கு இது தேவைப்படுகிறது. ஆனால் ஆதாரில் உள்ள பயோமெட்ரிக் தகவல்கள் (கைரேகை, முக படம்) சில வயதுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்.
கட்டாய MBU என்றால் என்ன?
5 வயதில் முதல் முறையாக பயோமெட்ரிக் அப்டேட் செய்யவேண்டும். 15 வயதில் இரண்டாம் முறையாக புதுப்பிக்கவேண்டும். இவை இரண்டும் Mandatory Biometric Update (MBU) என அழைக்கப்படுகின்றன. முந்தைய நிலைமையில், 5–17 வயதுக்குப் பிறகு MBU செய்ய ரூ.125 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது, இந்த 5–17 வயது எல்லைக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அப்டேட் இலவசமாக்கப்பட்டுள்ளது.
எதற்காக இது முக்கியம்?
ஆதார் கார்டு அப்டேட் இருந்தால், பல முக்கிய சேவைகள் எளிதாக கிடைக்கும். குழந்தைகள் பள்ளியில் சேரும் போது தடையில்லாமல் செயல்முறை நடக்கும் . புகைப்படம் மற்றும் கைரேகைகள் உள்ள ஆதார் அட்டை, அடையாளமாக பல இடங்களில் செல்லுபடியாகும் பெற்றோர்கள்

கவனிக்க வேண்டியவை:
உங்கள் குழந்தை 5 அல்லது 15 வயதை கடந்திருந்தால், உடனடியாக அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் அப்டேட் செய்யுங்கள். இந்த சலுகை மட்டும் ஒரு வருடத்திற்கு தான் வழங்கப்படுகிறது. எனவே நேரம் உடனடியாக இதனை பயன்படுத்திக் கொள்ளவும். சுமார் 6 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கப்போகிறது ஆதார் அப்டேட் இவ்வளவு இலவசமாக இருக்கையில், அதை தவறவிடாதீர்கள்..இது எதிர்காலத்தில் பல சிரமங்களைத் தவிர்க்க உதவும்.
