தன்னிடம் அத்துமீறிய ஹீரோவிடம் செருப்பைக்காட்டி எச்சரித்துள்ளார் குஷ்பு. அதன் பின்னர் அந்த ஹீரோ அடங்கிவிட்டதாக சொல்கிறார் குஷ்பு.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார் குஷ்பு. கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் குஷ்பு.
தான் சிறுமியாக இருந்தபோது தன்னைப்பெற்ற தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை வெளிப்படையாக சொல்லி அதிரவைத்தார் குஷ்பு. இந்த உலகத்தில் தனக்கு பாதுகாப்பான நபர் என்று நினைத்திருந்த தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்ததால் அந்த வயதில் அவரை தட்டிக்கேட்கவும் முடியாமல் தவித்ததாக மனவேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் கோவாவில் நடந்த சர்வதேச பட விழாவில் ‘திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’’ குறித்த விவாதத்தின் போது படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக பேசி இருக்கிறார் குஷ்பு.
தான் நடிக்க வந்த புதிதில், படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு ஹீரோ தன்னிடம் அத்துமீறியதாகவும், உடனே ஆத்திரத்தில் செருப்பை கழற்றிக்காட்டி எச்சரித்ததும் அந்த ஹீரோ அடங்கிப்போனதாகவும் வெளிப்படையாக சொல்லி அதிரவைத்திருக்கிறார் குஷ்பு.
குஷ்பு இப்படிச்சொன்ன பிறகு, ‘’யார் அந்த ஹீரோ?’’ என்ற சலசலப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.