படப்பிடிப்பு முடிந்து இரவில் கொச்சியில் இருந்து திருச்சூருக்கு காரில் வீடு திரும்பிய அந்த பிரபல நடிகை டிரைவர் உதவியுடன் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் பின்னர் தப்பித்து வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசில் புகார் மூலம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகையின் புகாரை அடுத்து அவருக்கு டிரைவராக இருந்த பல்சர் சுனில்குமார் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பகீர் தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள நடிக திலீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2017ம் ஆண்டும் நடந்த நடிகை கடத்தல் வழக்கு விசாரணை 2018ம் ஆண்டு முதல் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆறரை வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை. உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் கூட இந்த விசாரணை இன்னும் நீண்டுகொண்டேதான் செல்கிறது.
சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பல்சர் சுனில்குமார் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜாமீனில் வந்தார்.
இந்நிலை நேற்று இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை தொடங்கி இருக்கிறது. இதனால் இன்னும் 2 மாதங்களில் இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்றுதெரிகிறது.
நேற்று நடந்த விசாரணயில் திலீப், பல்சர் சுனில்குமார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மூடப்பட்ட நீதிமன்றத்தில் அவர்களிடம் விசாரணை நடந்தது.