அதானி குழுமம் இந்தியா-நேபாள எல்லைக்கு அருகே அமைய உள்ள ஒரு புதிய விமான நிலையத்தில் முதலீடுகளை செய்ய பரிசீலித்து வருகிறது.
மேலும் நேபாள நாட்டில் உள்ள இரண்டு முக்கியமான விமான நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கையகப்படுத்தவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாக, IANS செய்தி நிறுவனம் நேபாள அமைச்சரின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நேபாளத்தில் குறிப்பாக எரிசக்தி மற்றும் விமான நிலைய மேலாண்மைத் துறைகளில் முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாக நேபாள நிதியமைச்சர் ராம் சரண் மஹத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது நேபாள நிதியமைச்சர் ராம் சரண் மஹத் மற்றும் அதானி இடையேயான சந்திப்பு நடந்தபோது இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் பைரவாஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் நிர்வாகத்தை அதானி குழுமம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், பைரவாஹா மற்றும் நிஜ்கத் சர்வதேச விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.