ஓபிஎஸ்க்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடப்பாடி சொல்லிக்கொண்டிருக்கும் போது இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் ஒப்புதல் தர வேண்டும் என திடீரென்று நீதிமன்றம் போட்ட உத்தரவால் ஆடிப்போயிருக்கிறார் எடப்பாடி.
பொதுக்குழு நடத்தி ஓபிஎஸ்சை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டார் எடப்பாடி. அதன்பின்னர் அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேடினை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் மூலமாக ஓபிஎஸ்க்கு தடை போட்டுவிட்டார் எடப்பாடி.
இந்நிலையில் தற்போது நீதிமன்றமே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓபிஎஸ்சின் பதிலைக்கேட்கச் சொல்லி இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் கூட, இரட்டை சின்னம் தொடர்பான வழக்கு நிலையில் உள்ளது. அதிமுகவில் உள்கட்சி விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்கு முடிவுக்கு வரும் வரையிலும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று, ஓபிஎஸ்சின் வழக்கறிஞர்கள் அரவ்ந்த் பாண்டியன், திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர் வாதிட்டனர்.
சூர்யமூர்த்தின் மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஒபிஎஸ் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் அமைப்பு தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஓபிஎஸ்சின் பதவிக்காலம் 2026ஆம் தேதி வரையிலும் உள்ளது என்றும், தற்காலிக ஏற்பாடாகத்தான் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி கையில் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம். இதை எல்லாம், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டும் போது சொல்ல இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.
அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்ன நீதிமன்றமே இப்போது ஓபிஎஸ்சின் பதிலைக் கேட்டு, மீண்டும் அவரை அதிமுக விவகாரத்தில் உள்ளிழுக்குதே. இந்த சிக்கலை எப்படித் தீர்க்கலாம் என்று விழிபிதுங்கி நிற்கிறார் எடப்பாடி.