செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) ஆகிய துறைகள் தொடர்ச்சியான முன்னேற்றங்களை அடைந்துவரும் முக்கியத் துறைகளாகும்.
இதுத் தொடர்பான புதிய திறன்களை அறிந்துக் கொள்வது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இன்றியமையாத தேவையாக உருவெடுத்துள்ளது.
புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கு உதவியாக, பல ஆன்லைன் தளங்கள் இலவச AI மற்றும் ரோபாட்டிக்ஸ் படிப்புகளை வழங்கி வருகின்றன.
1. Coursera:
Coursera என்பது சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் இலவச AI மற்றும் Robotics படிப்புகளின் புதையல் ஆகும். அறிமுகப் படிப்புகள் முதல் மெஷின் லேர்னிங் மற்றும் ரோபோடிக் சிஸ்டம்ஸ் போன்ற பிரத்யேக தலைப்புகள் வரை, Coursera அனைத்து நிலைகளிலும் நமக்கு உதவிகரமாக இருக்கும் தளமாகும்.
2. edX:
உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து உயர்தர படிப்புகளுக்கான அணுகலை edX தளம் வழங்குகிறது. ஃபண்டமெண்டல் கான்செப்ட், வழிமுறைகள் மற்றும் நடைமுறைப் பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய AI மற்றும் ரோபாட்டிக்ஸ் பற்றிய இலவசப் படிப்புகளையும், இந்த துறைகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளவும் edX தளம் உதவும்.
3. MIT OpenCourseWare:
ஓபன்கோர்ஸ்வேர்(OpenCourseWare) மூலம் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) பல்கலைக்கழகம் ஏராளமான புதிய தொழில்நுட்பப் பாடங்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் இருந்து திறன்களைக் கற்றுக்கொள்ள MIT-யின் AI மற்றும் ரோபாட்டிக்ஸ் படிப்புகள் சிறந்து விளங்குகிறது.
4. Khan Academy:
Khan Academy-யின் கல்வித் தளமானது User-Friendly அணுகுமுறைக்கு புகழ்பெற்றது. இந்த தளம் AI, Machine Learning மற்றும் Basic Robotics பற்றிய இலவச படிப்புகளை வழங்குகிறது. சிக்கலான படிப்புகளையும் பல்வேறு நிலைகளாகப் பிரித்து எளிதாகக் கற்கக்கூடிய அணுகலை Khan Academy வழங்குகிறது.
5. Udacity:
AI மற்றும் Robotics பற்றிய இலவச படிப்புகளை Udacity தளம் வழங்குகிறது. நிஜ-உலகப் பயன்பாடுகளுடன் தொடர்புப்படுத்தி மதிப்புமிக்க தொழில்நுட்பத் திறன்களைப் பெறலாம்.
6. Google AI:
AI Concepts மற்றும் Tools-களைக் கற்றுக்கொள்ள Google AI பல்வேறு இலவசப் படிப்புகளை வழங்குகிறது. மெஷின் லேர்னிங் அடிப்படைகள் முதல் TensorFlow போன்ற சிறப்புப் படிப்புகள் வரை, Google AI-இன் பல்வேறு படிப்புகள், Google நிறுவனத்தின் நிபுணத்துவத்துடன் கற்றுக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: Google நிறுவனம் இலவசமாக வழங்கி வரும் சிறந்த ஆன்லைன் AI படிப்புகளின் தொகுப்பு.. இதோ!
7. ROS (Robot Operating System) Wiki:
ரோபாட்டிக்ஸில் ஆர்வமுள்ளவர்களுக்கு, ROS Wiki ஒரு விலைமதிப்பற்ற தளமாகும். ரோபோ இயக்க முறைமை(Robot Operating System) ரோபாட்டிக்ஸ் சமூகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இந்த சக்திவாய்ந்த கருவியில் தேர்ச்சி பெற விரும்பும் நபர்களுக்கு ROS விக்கி இலவச ஆவணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது.
8. Carnegie Mellon University Robotics Academy:
கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் ரோபாட்டிக்ஸ் அகாடமி, Robotics பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்களை இலவசமாக வழங்குகிறது. கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த தளமாக திகழ்கிறது.
9. Fast.ai:
Fast.ai நடைமுறை பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் பாடப் பிரிவுகளுடன் இலவச திறன் படிப்புகளை வழங்குகிறது. Fast.ai வழங்கும் இலவச Practical Deep Learning மூலம் நடைமுறை பயன்பாடுகளில் Deep learning மற்றும் Machine learning தொழில்நுட்பத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்து கற்றுக்கொள்ளலாம்.
10. Microsoft AI Classroom Series:
மைக்ரோசாப்டின் AI Classroom Series-ல், AI இன் அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கிய இலவச படிப்புகள் வழங்கப்படுகிறது. நடைமுறை பயன்பாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நிஜ உலக சூழ்நிலைகளில் AI எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள Microsoft நிறுவனத்தின் இந்தப் படிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் ஒரு தொடக்கநிலை அல்லது அனுபவம் வாய்ந்த நிபுணராக இருந்தாலும், மேற்கண்ட கல்வித் தளங்கள் உங்கள் அறிவை மேம்படுத்தவும், தொழில்துறையின் போக்குகளை அறிந்துகொள்ளவும், AI மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையில் வெற்றிகரமான பயணத்திற்கு வழி வகுக்கவும் வாய்ப்பளிக்கின்றன.