உலகளவில் ஐடி ஊழியர்கள் தினமும் பணிநீக்க அச்சத்தில் இருந்து வரும் சூழலில் HCL நிறுவனத்தின் முன்னாள் CEO வினீத் நாயர், இந்திய ஐடி ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைக்கும் அளவுக்கு ஒரு முக்கியப் பிரச்சனையைப் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆக்கிரமித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்திய ஐடி துறையின் மூத்த அதிகாரியும், முன்னாள் HCL தலைமை செயல் அதிகாரியான வினீத் நாயர் இது தொடர்பாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய ஐடி துறையில் பணியாற்றுபவர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கும் என்று வினீத் நாயர் கூறியுள்ளார். AI துறையால் ஏற்படும் பாதிப்புக் குறித்து வினீத் நாயர் கூறுகையில், சுமார் 70 சதவீத இந்திய ஐடி ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்கொள்வார்கள் என எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து India Today செய்தி நிறுவனத்துடனான உரையாடலில் வினீத் நாயர் கூறுகையில், ஆட்டோமேஷன், AI தாக்கம் காரணமாக, ஒரு வேலையை செய்ய நிறுவனங்களுக்கு முன்பு தேவைப்பட்டதை விட 70 சதவீதம் குறைவான ஊழியர்களே இருந்தால் போதும் என்கிற நிலை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Coding, Testing செய்தல், Maintanence, பிரச்சனை நிறைந்த வேலைகளைக் கையாள்வது போன்ற ஊழியர்களின் திறன்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் எடுத்துக்கொள்ளப்படும் என்று HCL வினீத் நாயர் எச்சரித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், Nvidia தலைமை செயல் அதிகாரி Jensen Huang செயற்கை நுண்ணறிவு குறியீட்டு எழுதுவதை மாற்றும் என்று குறிப்பிட்டிருந்தார்.
AI தொழில்நுட்பம் மனித திறனை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என்கிற காரணத்தால், சுலபமான வேலைகள் அனைத்தையும் AI கைப்பற்றும், இதன் படிப்படியான வளர்ச்சி கட்டாயம் பெரும் தாக்கத்தை வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் எனவும் வினீத் நாயர் கூறியுள்ளார்.
மேலும், இதனால் பணியாளர்களின் பணிநீக்கம் அதிகரித்து, ஊழியர்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் தள்ளப்படும் என்றும், இது இந்தியா ஐடி துறைக்கே பெரும் ஆபத்தாக உருவெடுக்கும் என்றும் வினீத் நாயர் எச்சரித்துள்ளார்.